ஹைதராபாத்: ஹைதராபாத் கூகட்பல்லி சங்கீத்நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா – ரேணுகா தம்பதிக்கு 6-ம் வகுப்பு படிக்கும் சகஸ்ரா (11) என்கிற மகளும், 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை 18-ம் தேதி காலை வழக்கம்போல் கிருஷ்ணாவும், ரேணுகாவும் பணிக்கு சென்றனர். 7வயது மகனும் பள்ளிக்கு சென்றான். ஆனால், ஸ்போர்ட்ஸ் டே வை முன்னிட்டு மகள் சகஸ்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
பணி முடிந்து வீடு திரும்பிய ரேணுகா, சகஸ்ரா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அலறினார். தகவல் அறிந்து வந்த போலீஸார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.