திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூலை மாதம் லட்டு விற்பனையில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையானின் லட்டு பிரசாதம் 1,25,10,300 தயாரிக்கப்பட்டதில், 1,24,40,082 விற்பனையாகி உள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,04,57,550 லட்டு பிரசாதங்கள் விற்பனையானது. இதில் விசேஷம் என்னவெனில் கடந்த ஜூலை 12-ம் தேதியன்று மட்டும் 4,86,134 லட்டு பிரசாதங்கள் விற்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி 3.24 லட்சம் லட்டுகள் மட்டுமே விற்பனையானது. இந்த ஒரு நாளில் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு விற்பனையின் மூலம் ரூ.2.43 கோடி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.