Last Updated : 22 Aug, 2025 09:08 AM
Published : 22 Aug 2025 09:08 AM
Last Updated : 22 Aug 2025 09:08 AM

திருவனந்தபுரம்: மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் நேற்று முன்தினம் கூறுகையில், “சமூக ஊடகம் மூலம் என்னுடன் நட்புடன் பழகிய அரசியல்வாதி ஒருவர் எனக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பி, ஓட்டல் அறைக்கு அழைத்தார். காங்கிரஸில் இருப்பவர்கள் உட்பட மேலும் பல பெண்களுக்கு இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
அரசியல்வாதியின் பெயரை வெளியிட அவர் மறுத்துவிட்டார். என்றாலும் அது பாலக்காடு எம்எல்ஏவும் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராகுல் தான் என ஊகங்கள் வெளியாகின. கடந்த ஆண்டு பாலக்காடு இடைத்தேர்தலில் வென்ற ராகுல் தொடக்கத்தில் இந்தப் புகாருக்கு பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் மம்கூடத்தில் நேற்று ராஜினாமா செய்தார். எனினும் பாலக்காடு எம்எல்ஏ பதவியில் அவர் தொடர்கிறார்.
FOLLOW US
தவறவிடாதீர்!