பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டு படங்களின் வெளியீட்டிலுமே குழப்பம் நீடித்து வந்தது. முதலில் ‘ட்யூட்’ படமே தீபாவளிக்கு வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது ‘எல்.ஐ.கே’ திரைப்படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் தீபாவளி வெளியீட்டில் இருந்து ‘ட்யூட்’ படம் பின்வாங்கும் என்பது உறுதியாகிறது. டிசம்பர் வெளியீட்டுக்கு மாற்றியப்படும் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் குறுகிய காலத்தில் இரண்டு பிரதீப் ரங்கநாதன் படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘எல்.ஐ.கே’. லலித்குமார் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அதேபோல் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்யூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.