Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, April 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி
    உலகம்

    இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி

    adminBy adminAugust 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

    இந்தியா மீது 25% இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக உறவைத் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெற்கு கலோரிலான மாகாண முன்னாள் ஆளுநரும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பின்னர் போட்டியில் இருந்து விலகியவருமான நிக்கி ஹேலி, இது தொடர்பாக நியூஸ் வீக் இதழில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.

    நிக்கி ஹேலி எழுதியுள்ள அந்தக் கட்டுரையில், “சீனாவை முறியடித்து வலிமையின் மூலம் அமைதியை நிலைநாட்டுவது என்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இலக்குகள் மிக முக்கியமானவை. அமெரிக்க – இந்திய உறவுகளை மீண்டும் இயல்பான பாதைக்கு திருப்புவதைவிட இந்த இலக்குகள் மிகவும் முக்கியமானவை. இதற்காக, சீனாவைப் போல எதிரியாகக் கருதாமல், மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக இந்தியாவை அமெரிக்கா நடத்த வேண்டும்.

    ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து வரும் நாடாக சீனா உள்ள போதிலும் அமெரிக்காவின் வரிவிதிப்பை அது தவிர்த்து வருகிறது. இந்தியா – அமெரிக்கா இடையேயான நெருக்கமான உறவில் இந்த பாரபட்சம் பெரிய விஷயம் இல்லை என அமெரிக்கா நினைக்குமானால், அது யதார்த்தமல்ல. இந்தியா உடனான உறவை சரிவில் இருந்து மீட்பதே அமெரிக்க வெளியுறவு கொள்கையின் மிக முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

    ஆசியாவில் சீன ஆதிக்கத்துக்கு எதிராக செயல்படக்கூடிய ஒரே நாடாக உள்ள இந்தியாவுடன், தனக்கு இருக்கும் 25 ஆண்டு கால நெருக்கத்தை முறித்துக்கொள்வது உத்தி சார்ந்த பேரழிவாக இருக்கும். ஜவுளி, தொலைபேசிகள், சோலார் பேனல்கள் போன்ற துறைகளில் அதிக அளவில் உற்பத்தித் திறனை கொண்டிருக்கும் நாடு இந்தியா. இவற்றை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை மாற்ற அமெரிக்கா வேண்டுமானால், அதற்கு இந்தியா மிகவும் முக்கியமானது.

    பாதுகாப்புத் துறையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவு விரிவடைந்து வருகிறது. இதன்மூலம், சுதந்திர உலகின் மிக முக்கிய சொத்தாக இந்தியா திகழ்கிறது. மேற்கு ஆசியாவில் இந்தியாவின் வளர்ச்சி, சீனாவின் வர்த்தக பாதைகளில் இந்தியாவுக்கு இருக்கும் இடம் ஆகியவை அந்நாட்டை அமெரிக்காவுக்கான பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாளியாக ஆக்குகிறது” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    EB-5 இல் முதலீடு செய்வதன் மூலம் இந்தியர்கள் ஒரு உதவி செய்கிறார்கள்: தொழில்நுட்ப தொழில்முனைவோர் ‘இனவெறி குப்பைகளை’ நிறுத்த அழைப்பு – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    வைரல் வீடியோவில் பார்க்கிங் ஸ்பாட் சண்டையின் போது அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி மருத்துவர் கரும்பு குச்சியைப் பயன்படுத்துவதைக் கண்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    கரிஷ்மா விஜய் யார்? ஆலன் சுகர் சலசலப்புக்குப் பிறகு இந்திய வம்சாவளி பயிற்சி 2026 இறுதிப் போட்டி வைரலாகும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    ‘என் அம்மாவின் கதை தனித்துவமானது அல்ல’: ICE ஆல் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளி மொழிபெயர்ப்பாளரான மீனு பாத்ராவின் மகள், மௌனம் உடைக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    பராக் ஒபாமாவின் அன்றைய மேற்கோள்: “எங்கள் பிரச்சினைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை, எனவே அவை மனிதனால் தீர்க்கப்படும், மேலும் மனிதன் நாம் விரும்பும் அளவுக்கு பெரியதாக இருக்க முடியும்.” | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    உலகக் கோப்பை 2026: டெயில்கேட்டிங் தடை செய்வதன் மூலம் ஃபிஃபா அமெரிக்க மேட்ச்டே அனுபவத்தை அழிக்கிறதா? | சர்வதேச விளையாட்டு செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘சீகல்லிங்’ என்றால் என்ன? தந்திரமான டேட்டிங் போக்கு உங்களை கவர்ந்திழுக்கும்: கவனிக்க வேண்டிய 3 அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவின் சொகுசு ரியல் எஸ்டேட்டை வடிவமைக்கும் முதல் 7 தெற்கு மும்பையின் உயர்நிலை சுற்றுப்புறங்கள்
    • நேபாள பயணத்தின் மறக்க முடியாத 10 நினைவுப் பொருட்கள் இமயமலையின் மனதைக் கவரும்
    • ரிக்கி பாண்டிங் ஹவுஸ்: மெல்போர்னின் டூரக்கில் உள்ள ரிக்கி பாண்டிங்கின் ₹173 கோடி ‘டிராபி ஹோம்’ தனியார் டென்னிஸ் மைதானம், வடிவமைப்பாளர் குளம் மற்றும் கிரிக்கெட் நினைவுச் சின்னங்களுடன் ஆடம்பரமாக அலறுகிறது.
    • பொய்யான திரைப்படங்கள்: பெரும்பாலான ஜோடிகள் உடனடியாக காதலிப்பதில்லை – உண்மையில் என்ன நடக்கிறது என்பது இதோ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.