இணையத்தில் எழுந்த கிண்டல் தொடர்பாக நாக வம்சி பதிலடிக் கொடுத்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் நாக வம்சி. இவரது அதிரடியான கருத்துகளுக்கு எப்போதுமே இணையத்தில் பெரும் ரசிகர்கள் உண்டு. அதே வேளை அவருடைய கருத்துகளை கிண்டல் செய்பவர்களும் உண்டு. சமீபத்தில் இவருடைய தயாரிப்பில் வெளியான ‘கிங்டம்’, விநியோகஸ்தராக வெளியிட்ட ‘வார் 2’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவின.
இந்த இரண்டு படங்கள் வெளியீட்டு சமயத்தில் நாக வம்சி பேசிய விஷயங்கள் யாவுமே இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகின. மேலும், நாக வம்சியும் இணையத்தில் இருந்து சில நாட்களுக்கு விலகியே இருந்தார். இதனை வைத்து நாக வம்சி திரையுலகில் இருந்து விலகப் போகிறார் என்றெல்லாம் வதந்திகள், கிண்டல்கள் பரவின.
இது தொடர்பாக நாக வம்சி, “என்னை மிகவும் மிஸ் பண்ற மாதிரியே தெரிகிறது. வம்சி இது, வம்சி அது கதைகள் ஓடிக் கொண்டே இருக்கிறது. பரவாயில்லை. இணையத்திலும் நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அனைவரும் சந்தோஷப்படுவது மாதிரி இருந்தாலும், அந்த நேரம் இன்னும் வரவில்லை. அதற்கு இன்னும் 10-15 வருடங்கள் இருக்கிறது. சினிமாவுக்காக எப்போதும். ’மாஸ் ஜாத்ரா’ உடன் விரைவில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Enti nannu chala miss avthunattu unnaru..
Vamsi adi, Vamsi idi ani gripping narratives tho full hadavidi nadustundi…
Parledu, X lo manchi writers unnaru.Sorry to disappoint you all, but inka aa time raaledu… minimum inko 10-15 years undi.
At the cinemas… for the cinema,…
— Naga Vamsi (@vamsi84) August 20, 2025