சென்னை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மோசமான வானிலை நிலவுவதால், மும்பையில் இருந்து நேற்று மாலை 5.35 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், சென்னையில் இருந்து நேற்று மாலை 6.20 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மும்பை – சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மும்பை – சென்னை ஏர் இந்தியா விமானம், சென்னை – மும்பை ஏர் இந்தியா விமானம், சென்னை – மும்பை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதமானது. விமானங்கள் ரத்து, தாமதம் குறித்து, இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு முன்னதாகவே அறிவிப்பு கொடுத்து, அவர்கள் மாற்று விமானங்களில், பயணிக்க ஏற்பாடுகளை செய்தது.