‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி, ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி என பலர் நடித்துள்ளனர். செப்.5-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 1946-ல் வங்கத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் வங்கத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் கோபால் முகர்ஜியை தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி மீது கோபால் முகர்ஜியின் பேரன் சாந்தனு, போலீஸில் புகார் அளித்துள்ளார். தனது தாத்தாவுக்கு எதிராக அவமானகரமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், கொல்கத்தாவில் உள்ள பவ்பஜார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.