பிரபல ஹாலிவுட் நடிகர் டெரன்ஸ் ஸ்டாம்ப் (87). இவர், ஜெனரல் ஸோட் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர்.
‘வால் ஸ்ட்ரீட்’ (1987), ‘யங் கன்ஸ்’ (1988), ‘த அட்வெஞ்சர்ஸ் ஆப் பிரிசில்லா: குயின் ஆஃப் டெசர்ட்’ (1994), ‘ஸ்டார் வார்ஸ் 1’, டாம் குரூஸின் ‘வால்கெய்ரி’ (2008) உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கோல்டன் குளோப் விருது, கேன்ஸ் பட விழா விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர், இடையில் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இந்தியா வந்து யோகா பயின்றார்.
இந்நிலையில் உடல் நலமில்லாமல் இருந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் இறப்புக்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.