சென்னை: சினிமாவில் 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த நயினார் நாகேந்திரன் இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “இந்தியாவின் பத்ம விபூசண், தாதா சாகிப் பால்கே விருது பெற்ற கலைஞன், ஆறிலிருந்து ஐம்பது வரையில் அனைவருக்குமான சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்தை இன்று அவர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினேன். அவர் வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தேன்.
அரை நூற்றாண்டு காலம் இந்திய திரையுலகை ஆண்ட கலைஞன், நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும் என்றும் அழியாமல் காட்சி தரும் தேசிய நடிகர். அண்ணன் ரஜினிகாந்த் இன்னும் பல நூற்றாண்டு காலம் திரை உலகை ஆண்டு தாயகப் பணி ஆற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து, அவரை வாழ்த்தி வணங்குகிறேன்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இந்தியாவின் பத்ம விபூசண்!
தாதா சாகிப் பால்கே விருது பெற்ற கலைஞன், ஆறிலிருந்து ஐம்பது வரையில் அனைவருக்குமான சூப்பர் ஸ்டார் அண்ணன் திரு. @rajinikanth அவர்களை இன்று அவர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினேன்.அவர் வாழ்த்துக்களைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தேன்! அரை நூற்றாண்டு காலம்… pic.twitter.com/TAOu8zmGzV
— Nainar Nagenthiran (@NainarBJP) August 18, 2025