கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்று (ஆகஸ்ட் 17) ஞாயிற்றுக்கிழமை கோவைக் குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது. என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.