சந்த் ஸ்ரீ மவுலி த்யானேஷ்வர் மஹராஜின் 750-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர். என்.ரவி, வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தின் சிறப்பு என்று தெரிவித்துள்ளார்.
விஷ்வ வாரகரி சந்த் ஸ்ரீ ஞானேஸ்வர் மகராஜ் மற் றும் வாரகரி சந்துக்களின் ஆன் மிக பாரம்பரியத்தை உலக அள வில் பரப்பும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் சார்பில் சந்த் ஸ்ரீ மவுலி த்யானேஷ்வர் மஹராஜின் 750-வது ஜெயந்தி விழா, சென்னை அடையார் அனந்த பத்மநாப சுவாமி கோயிலின் காஞ்சி மகாஸ்வாமி அனந்த மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர். என்.ரவி, கடையநல்லூர் விஷ்வ வாரகரி சம்ஸ்தான் நிறுவனத் தின் உத்ராதிகாரி ரகுநாத் தாஸ் மஹராஜ், தனது முனைவர் பட்ட ஆய்வின் அடிப்படையில் எழு திய ‘த்யானோத்தர பக்தி்’ என்ற நூலை வெளியிட்டார். முதல் பிர தியை வேதாந்த விற்பன்னர் ஆர். ரங்கன் ஜியும், இரண்டாவது பிரதியை ஸ்ரீ துகாராம் கணபதி மகா ராஜ்ஜும் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக வரவேற்புரையாற் றிய பஞ்சாபகேசன், சந்த் ஸ்ரீ மவுலி த்யானேஷ்வர் மஹராஜின் வாழ்க் கைச் சரித்திரத்தை சுருக்கமாகக் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ரங்கன் ஜி ஞானோத்தர பக்தி மற்றும் பாரதத்தின் ஆழமான தொடர்பைப் பற்றி வி மேலும் ஒவ்வொரு ஜீவராசி யிலும் பரமாத்மாவைக் காணும் பக்தன், தன் பக்தி, சேவை மனப் பான்மை அர்ப்பணிப்புடன் தெய் வத்துக்கும் மனிதகுலத்துக்கும் சேவை செய்ய வேண்டும் என் பதை வலியுறுத்தினார். பற்றி விவரித்தார்.
ஸ்ரீ துகாராம் கணபதி மகாராஜ் பேசும்போது குருவின் வல்லமை, அவரது வாக்கு ஆகியவை குறித்து எடுத்துரைத்தார், மேலும், பகவன் நாமப் பிரச்சாரப் பயணம் எவ்விதம் தொடங்கியது என்பதை பற்றி விவரித்தார். நூலின் ஆசி ரியர் ஸ்ரீ ரகுநாத தாஸ் மகாராஜ் பேசும்போது, ஆன்மிக முன்னேற் றத்தில் ஞானமும் பக்தியும் பிரிக்க முடியாதவை என்பதை விவரித் தார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவிபேசியதாவது:பாரதம் உலகை இயக்கும் உயிர்சக்தி என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். தர்மத்தில் நம்முடைய ஈடுபாடு சேரும்போது இந்த ஆற்றல் அதிகரிக்கிறது. பாரதம் சனாதன தர்மத்தின் காலமற்ற மகத்துவத்தை போற்றி வருகிறது. அறிவால் பிறந்த ஒரே புண்ணிய பூமி நம் பாரதம்தான். இந்தியா முழுவதும் குருநானக், நர்சிங் மேத்தா, ரவி தாஸ், துளசி தாஸ், சங்கர் தேவ், ஜெயதேவர், சைதன்ய பிரபு, ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் பக் தர்கள் மனதில் ஞானத்தையும் பக்தியையும் பதிய வைத்தனர். கலாச்சாரம் மக்கள் மனங்களில் வாழ்கிறது. அது அமைப்புகள், கட்டிடங்களில் மட்டும் இல்லை.
வேற்றுமையில் ஒற்றுமை என் பதே பாரதத்தின் சிறப்பு.பலமொழி கள், பலபழக்கவழக்கங்கள்என்று இருந்தாலும் மக்கள் மனதில் ஒற் றுமை உணர்வு இருக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருப்பதை மகா உபநிஷதம் வசு தைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்று குறிப்பிட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சுபாஷ் நன்றி யுரை வழங்கினார். ஸ்ரீ சிற்சக்தி அஞ்சலி காட்கில் மாதாஜி, விஷ்வ வாரகரி சம்ஸ்தான் காரியகர்த்தாக்கள், பக்தர்கள் என்று பலர் பங்கேற்றனர்.