பேகா: என்எஸ்டபிள்யூ பேகா ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் பேகா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின் நூர் கஃபாகியை எதிர்த்து விளையாடினார். 54 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 17 வயதான அனஹத் சிங் 3-2 (10-12, 11-5, 11-5, 10-12, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் அனஹத் சிங், எகிப்தின் ஹபீபா ஹானியுடன் மோதுகிறார். ஹபீபா ஹானி அரை இறுதியில் 3-1 (11-9, 7-11, 12-10, 11-6) என்ற செட் கணக்கில் இந்தியாவின் அகன்க்ஷா சலுங்கேவை வீழ்த்தினார்.