சாதிய தடைகள் நீக்கப்பட்ட பின்புதான், நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும் என்று திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 63-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி. சென்னை, காமராஜர் அரங்கில் நேற்று மதச் சார்பின்மை காப்போம்’ என்னும் கருப்பொருளை மையப்படுத்தி சிறப்பு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. மாலை 4 மணி அளவில் விழா தொடங்கியது. விழா மேடைக்கு வந்த திருமாவளவனுக்கு சிறுமி பூ கொடுத்து வரவேற்றார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, ஏஐ தொழில்நுட்பத் தில் உருவாக்கப்பட்ட ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மதச்சார்பின்மை காப்போம் தலைப் பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில், இயக்குநர் கே.பாக்ய ராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம் பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்கேற்றனர். பின் னர். மதச்சார்பின்மை காப்போம் தலைப்பிலேயே ஊடக அரங்கமும் நடைபெற்றது.
இதையடுத்து, இரவு நடை பெற்ற வாழ்த்தரங்கில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் எம்.பி. தமிழ்நாடு பாடநூல் ச் நிறுவனத் தலைவர் ஐ.லியோனி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வே.வனிதா, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
கமல்ஹாசன் பேசியதாவது: திருமாவளவனின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்வு என்பது சாதாரணமானதல்ல. சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனம். சாதிய தடைகள் நீக்கப்பட்ட பின்பு தான், நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும். ஒடுக் கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்துவது என்பது எளிதல்ல. அப்படி அரசியல் மயப்படுத் துபவர்கள் அனைவருமே ஆச்சரியத்துக்குரியவர்கள். அற்புதமான மனிதர்கள். அடிக்கடி வரமாட்டார்கள்.
எனவே, திருமாவளவனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல் வேண்டுமா, ஆதாயம் வேண்டுமா என கேட்டால் திருமாவளவன் அரசியலைத் தான் தேர்ந்தெடுக்கிறார். அவரைக் கண்டு நான் வியக்கிறேன்.
கட்சியை வளர்ப்பது எத்தனை கஷ்டம் என்பது கட்சி ஆரம்பித்த எனக்குத் தெரியும். ஆனால், அவர் 40 ஆண்டுகளுக்கு முன்பேசெய்து விட்டார். என் சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள். சாதி தான் என் முதல் எதிரி. திருமாவளவன் உருவெடுத்த பிறகுதான், ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களுக்கு உண்மை யானவிடுதலைகிடைப்பதாகநான் நினைக்கிறேன். எல்லா வகையான அடக்குமுறைக்கும், ஒடுக்கு முறைக்கும் எதிர்த்து போராடுபவன் ஜனநாயக போராளி. திராவிடம் என்பது எல்லோரையும் சேர்த்தது தான். சிந்து நதி முதல் வைகை நதி வரை பரவி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து இரவு 12 மணி ஆன நிலையில், வான வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. திருமாவளவன் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கும். தொண்டர்களுக் கும் வழங்கினார். விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வரவேற்புரை யாற்றினார். விழாவுக்கு, விசிக பொதுச்செயலாளர் ம.சிந்தனைச் செல்வன், எம்எல்ஏ-க்கள் எஸ் .எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதன்மைச் செயலாளர் ஏ.சி. பாவரசு, தலைமை நிலையச் செய லாளர் பாலசிங்கம், செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன், மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.பன் னீர்தாஸ். 190-வது வட்ட செயலாளர் சிட்டு (எ) ஆமோஸ், தகடூர் தமிழ்ச்செல்வன், மா.வீரக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.