ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருந்த ‘தேவரா 2’ கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூனியர் என்.டி.ஆர் – கொரட்டலா சிவா இணைப்பில் வெளியான படம் ‘தேவரா’. இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, முதல் பாகம் மட்டுமே வெளியானது. 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், அது பற்றிய தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை. தற்போது இதன் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘தேவாரா’ முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. ஆனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இதனால் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், படக்குழுவினர் கண்டிப்பாக உருவாகும் என்று தெரிவித்திருந்தார்கள். தற்போது இப்படம் கைவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தேவரா’. இதனை நந்தமுரி கல்யாண் ராம் தயாரித்து வெளியிட்டார். இதன் தெலுங்கு உரிமையினை பெரும் விலைக் கொடுத்து வாங்கி வெளியிட்டார் நாக வம்சி.