சென்னை: சுதந்திர தினத்தயொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அளவில் தனிச் சிறப்புடன் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் தமிழக காவல் துறையைச் சேர்ந்த 3 காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி, பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பாலநாக தேவி, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் கார்த்திகேயன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி சு.லட்சுமி ஆகியோருக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும், குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க பணிக்கான பதக்கங்கள் 21 பேருக்கு வழங்கப்படுகின்றன.
அதன் விவரம் வருமாறு: சென்னை மாநில மனித உரிமைகள் ஆணைய (புலனாய்வுப் பிரிவு) காவல் கண்காணிப்பாளர் ஆ.ஜெயலட்சுமி, சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு (1) துணை ஆணையர் சக்திவேல், நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சு.விமலா, சென்னை பாதுகாப்புப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், திருச்சி மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபாலச்சந்திரன், சென்னை சிறப்புப் பிரிவு தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தேவசகாயம் ஆகியோருக்கும்,
கோவை சரக ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர், தாம்பரம் காவல் ஆணையரக சேலையூர் சரக உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெயசில், சென்னை ஆயுதப்படை-1 காவல் உதவி ஆணையர் முருகராஜ், சென்னை தரமணி காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ், காஞ்சிபுரம் குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன், திருநெல்வேலி தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அதிசயராஜ், வேலூர் மாவட்டம் சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மு.ரஜினிகாந்த், ஈரோடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் பா.ரஜினிகாந்த் ஆகியோருக்கும்,
சென்னை பாதுகாப்புப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீவித்யா, நாகை மாவட்டம் நாகூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அனந்தன், பெரம்பலூர் மாவட்டம் சிறப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கண்ணுசாமி, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன், சென்னை சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், சென்னை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை சிறப்பு புலனாய் வுப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கணேசன், சேலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் நந்தகுமார் ஆகிய 21 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.