Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு: 44 பேர் உயிரிழப்பு, 200 பேரை காணவில்லை
    தேசியம்

    ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு: 44 பேர் உயிரிழப்பு, 200 பேரை காணவில்லை

    adminBy adminAugust 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு: 44 பேர் உயிரிழப்பு, 200 பேரை காணவில்லை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயமடைந்தனர்.

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் நகரில் உள்ள சோசிட்டி கிராமத்தில் இந்த மிகப்பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள மாதா சண்டி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் இந்த மேகவெடிப்பு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் காணாமல் போன 200 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட 1,200 பேர் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா தெரிவித்துள்ளார்.

    இந்த பேரழிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கமளித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். “ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் மேக வெடிப்பு மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது பிரார்த்தனைகள் உள்ளன. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, காவல்துறை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    My thoughts and prayers are with all those affected by the cloudburst and flooding in Kishtwar, Jammu and Kashmir. The situation is being monitored closely. Rescue and relief operations are underway. Every possible assistance will be provided to those in need.


    — Narendra Modi (@narendramodi) August 14, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

    August 14, 2025
    தேசியம்

    ரேணுகாசுவாமி கொலை வழக்கு: ஜாமீன் ரத்தானதால் கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் கைது

    August 14, 2025
    தேசியம்

    தமிழகத்தின் 32 பேர் உட்பட 1,090 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள்!

    August 14, 2025
    தேசியம்

    Bihar SIR: 65 லட்சம் வாக்காளர்கள் விவரத்தை நீக்கியதன் காரணத்துடன் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

    August 14, 2025
    தேசியம்

    நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸின் தாஜா செய்யும் கொள்கையே காரணம்: யோகி ஆதித்யாநாத்

    August 14, 2025
    தேசியம்

    பிஹார், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் தொடரும் கனமழை: டெல்லிக்கு ஆர்ஞ்ச் அலர்ட்

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதிய டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு மதியம் வரை உயர் நீதிமன்றம் கெடு
    • இந்திய சுதந்திர போராளிகளால் ஈர்க்கப்பட்ட குழந்தை பெயர்கள்: மரியாதை, தைரியம் மற்றும் தேசபக்தி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் மனித உரிமை மீறல்: அரசுக்கு சமம் குடிமக்கள் இயக்கம் கண்டனம்
    • உங்கள் தொடர்ச்சியான இருமல் இதய நோய்க்கான மறைக்கப்பட்ட அடையாளமாக இருக்கும்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.