‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் ஏன் என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தாலும், இப்படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘A’ சான்றிதழ் கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்துள்ளது. பலரும் இது குறித்து விவாதிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
மேலும், லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களை விட ‘கூலி’ படத்தில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குறைவு என்றும் இணையத்தில் கூறி வருகிறார்கள். ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்டதற்கு படத்தில் வரும் உடல் சாம்பலக்கப்படும் காட்சிகள் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்கிறார்கள். ஏனென்றால் படத்தின் கதையே அதைச் சுற்றிதான் இருப்பதால், பலமுறை உடல்கள் சாம்பலக்கப்படும் காட்சிகள் ‘கூலி’ படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகத்தில் சட்டவிரோத செயல்கள் மட்டுமே நடைபெறுவது போன்று காட்டியிருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். இவை இரண்டுமே ‘A’ சான்றிதழ் கொடுத்திருப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. விரைவில் லோகேஷ் கனகராஜ் இதுகுறித்து பேட்டியளிப்பார். அதில் இதற்கான விளக்கம் இடம்பெறும் என்பது உறுதி.