Last Updated : 13 Aug, 2025 08:07 AM
Published : 13 Aug 2025 08:07 AM
Last Updated : 13 Aug 2025 08:07 AM

ராய்ப்பூர்: கடந்த 2022-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது வீடுகள்தோறும் தேசியக் கொடி ஏற்றும் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இந்த இயக்கம் ஒவ்வொரு சுதந்திர தின விழாவின்போதும் தேசப்பற்றுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
வரும் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியேற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் சத்தீஸ்கர் மாநில வக்பு வாரிய தலைவர் சலீம் ராஜ், மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகளின் நிர்வாகங்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சுதந்திர தின விழாவின்போது சத்தீஸ்கரில் உள்ள அனைத்து மசூதிகள், தர்காக்களில் கண்டிப்பாக தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும்.
இதற்காக சிறப்பு இணைய பக்கம் உள்ளது. அந்த பக்கத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்ட புகைப்படங்களை பகிர வேண்டும். அந்தந்த மசூதிகளின் இமாம் மற்றும் மசூதிகளின் நிர்வாகக் குழு தேசியக் கொடி ஏற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
FOLLOW US