தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவர் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். அதற்குப் பிறகு தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடித்து வந்தார் அபிநய். பிறகு வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார்.
இந்நிலையில் அவருடைய கல்லீரல் பாதிக்கப்பட்டதை அடுத்து அதற்காகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கான சிகிச்சைக்குப் பணமின்றி தவித்து வந்ததால் தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையறிந்த கேபிஒய் பாலா, அவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவினார். இன்னும் சிலரும் உதவிய நிலையில், அவருடைய மருத்துவச் செலவுக்காக நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் கொடுத்து உதவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.