Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»ஷோலே 50 ஆண்டுகள் | இதெல்லாம் ஒரு படமா?
    சினிமா

    ஷோலே 50 ஆண்டுகள் | இதெல்லாம் ஒரு படமா?

    adminBy adminAugust 12, 2025No Comments16 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஷோலே 50 ஆண்டுகள் | இதெல்லாம் ஒரு படமா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    15 ஆகஸ்ட் 1975… “ஷோலே ” வெளியான தினம். அந்த படத்தை பார்த்தவர்களுக்கு பிடிக்கவில்லை. விமர்சனங்களும், “ஷோலே “யை கிண்டல் பண்ணி, இதெல்லாம் ஒரு படமா? என்று பத்திரிகைகள் எழுதின. டைரக்டர் ரமேஷ் ஸிப்பி துவண்டு போனார். அவரை நம்பி, அவரோட அப்பா ஜி.பி.ஸிப்பி, 3 கோடி ரூபாய் செலவில் தயாரித்தார்.

    பத்து நாட்கள் கழித்து நிலமை மாறியது.பார்த்தவர்கள், வெளியே சொன்ன பாராட்டுகளால், மக்கள் கூட்டம் கூட்டமாய், குடும்பத்துடன் வந்து பார்த்தனர்.

    “ஷோலே” ரிலீஸான 100 தியேட்டர்களில், 25 வது வெள்ளி விழா வாரம் கொண்டாடிய முதல் & கடைசி இந்தியப் படம்.

    ” ஷோலே” பம்பாய் மினர்வா தியேட்டர்ல, தொடர்ந்து 5 வருடங்கள் ஓடியது.

    மக்கள் சாதி / மதம் / மொழி வித்தியாசம் இன்றி, குடும்பம் குடும்பமாக பார்த்ததால், “ஷோலே ” குடும்ப படமானது!

    ஷோலேக்கு முன், ஷோலேக்கு பின் என்று, ஹிந்தி சினிமா மாறியது.

    “ஷோலே”க்கான ஐடியா 1971 ல் சலீம் – ஜாவேத் எழுத்தாள இரட்டையர்களுக்கு தோன்றியது.

    அந்த 1971 வருஷம்தான், அவர்கள் இணைந்து பணிபுரிந்த, முதல் படம் “HAATI MERE SAATHI “வெளியாகி, NO:1 BLOCKBUSTER ஆனது.

    சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா ஹீரோ. அவர்தான் ,சலீம் – ஜாவேத் கூட்டணியை உருவாக்கியவர்.

    வெவ்வேறு சினிமா கம்பெனிகளின் கதை இலாகாவில் வேலை செய்து கொண்டிருந்த சலீம் & ஜாவேத், ஒன்றாக வேலை செய்த முதல் படம், “ANDAZ “(1971)

    அதன் டைரக்டர் ரமேஷ் ஸிப்பி. அவருக்கு அந்தாஸ் தான், முதல் படம்.

    கதை இலாகாவில் இருந்தால் லாபமில்லை, இரண்டு பேரும் சேர்ந்து தனியாக ஸ்கிரிப்ட் எழுதுங்க “,என்று முதல் வாய்ப்பை தந்தவர், சூப்பர் ஸ்டார் கன்னாதான்!

    SCREENPLAY

    SALIM JAVED

    என்று திரையில் முதலில் வந்தது, “ஹாதி மேரே ஸாத்ஹி “, படத்தில் தான்!

    அதே 1971 ல் இரண்டாவது BLOCKBUSTER படமான ,”மேரா காவுன் மேரா தேஷ் “ஐ காப்பி அடித்து, “ANGAARE ” எனும் கதையை ரெடி பண்ணிய இருவரும், டைரக்டர் மன் மோஹன் தேசாயிடம் கதையை சொல்கின்றனர்.

    கொள்ளை கும்பலால், தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ராணுவ உயர் அதிகாரி, COURT MARTIAL செய்யப்பட்ட, இரண்டு ராணுவ வீரர்களை வைத்து, கொள்ளை கும்பலை பழி வாங்குற கதை.

    தேசாய்க்கு கதை பிடிக்கவில்லை. ஜாலியாக காமெடி மசாலா கதையை சொல்லும்படி கூற, அதுதான் தர்மேந்திரா நடித்த, “CHACHA BHATIJA “(1977)

    1972 ல் ரிலீஸாகி BLOCKBUSTER NO :1 ஆன, “ஸீதா அவுர் கீதா “தான் ரமேஷ் ஸிப்பியின், இரண்டாவது படம்!

    அதை சலீம் – ஜாவேத் எழுதினர்!

    விஜயா புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டி, “எங்கள் படமான ராம் அவுர் ஷ்யாம் ( எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை) படத்தை உல்டா பண்ணி, நீங்க ஸீதா அவுர் கீதா எடுத்து இருக்கீங்க “,ன்னு தயாரிப்பாளர் ஜி.பி.ஸிப்பிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

    சலீம் – ஜாவேத் காப்பியடித்து தான் கதை எழுதுகிறார்கள் என்பது, அவர்களின் முதல் படத்திலேயே தெரிந்து விட்டது.

    “ஸீதா அவுர் கீதா “வின் ரீமேக் உரிமையை நாகிரெட்டி காருக்கு, தந்து பிரச்சினையை முடித்தனர்.

    SAG தான், தமிழில் வாணி ராணி ஆனது!

    சில லட்சங்களில் தயாரான SAG, 2 கோடி ரூபாயை 1972 ல் வசூலித்தது.

    தர்மேந்திரா – ஹேமா மாலினி ஜோடியை வைத்து, பிரம்மாண்டமான ஆக்ஷன் லவ் ஸப்ஜெக்ட் எடுக்க ரமேஷ் ஸிப்பி தயாராகிறார்.

    கதை ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க, என்கிறார் ஸிப்பி.

    அதே அங்காரே கதையை சொல்கிறார்கள், சலீம் – ஜாவேத்.

    “என்னா இதுவும் காப்பி அடிச்சு சொல்றீங்க. MGMD கதைதானே இது? “

    ” லேசா ரிப்பேர் பண்ணலாம். “

    “சூப்பர். ராணுவ அதிகாரியை போலீஸாக மாற்றுவோம். அவரோட ஒரு கைக்கு பதிலாக ரெண்டு கையையும் வெட்டுவோம். ஒரு திருடனுக்கு பதிலா, நம்ம படத்துல ரெண்டு திருடர்கள். “

    “எல்லாத்தையும் டைரக்டரே சொல்லிட்டா …நாங்க எதுக்கு. கொள்ளையன் பெயர் ஜப்பர் ஸிங்கை, கப்பர் ஸிங் காக மாற்றுவோம். அந்த நாணயத்தை சுண்டி போட்டு, முடிவு எடுக்குற ஸீன் சூப்பர். அதை அப்படியே வெச்சுக்குவோம்.ராஜ் கோஸ்லா கேஸ் போடுவாரா? “

    “மாட்டார்! அவரே இங்கிலிஷ் படத்லேந்து சுட்ட காட்சி தான் அது! “

    ” தர்மேந்திரா – ஹேமா மாலினி ஜோடியை ஜாலியான காதலர்களாக காட்டுவோம். இன்னொரு திருடன் – விதவையை காதலிப்பதை போலவும், வெள்ளை உடையிலே எப்பவுமே இருக்கிற விதவை, ஹோலி பண்டிகை விழாவில் வண்ணங்களை பார்த்து, லேசாக சிரிக்கிற மாதிரியே வைப்போம். “

    “ஒன் மினிட். இந்த ஸீனை எங்கேயோ பார்த்த ஞாபகம் …”

    “PHOOL AUR PATTHAR…”

    “ஓ.தர்மேந்திரா கோபப்பட்டு நம்மை அடிச்சுட மாட்டாரா? “

    “அவர் ஹேமாவை லவ் பண்றதில் பிஸியா இருப்பார். “

    MGMD லே திருவிழா /பாட்டிற்கு பிறகு FIGHT சூப்பரா இருக்குமே.”

    “இதிலே ஹோலி பாட்டுக்கு பின்னால வைப்போம். “

    “MGMD / PAP ஒரு வயதான மூதாட்டி ரோல் பிரமாதமாக இருக்குமே “

    “அதை முதியவராக மாத்துவோம். “

    “MGMD லே லக்ஷ்மி சாயாவுக்கு 3 பாட்டு…கிளைமாக்ஸ் முன்னாடி தர்மேந்திராவை கட்டிப் போடுற வில்லன். எதிரில் ஆடிப்பாடுற சாயா.”

    ” நாம கிளைமாக்ஸ் ஸாங்லே ஹேமாவை ஆடிப்பாட வைப்போம் ..”

    “ஹீரோயின் எதுக்கு அங்கே ஆடணும்? “

    “சூப்பர் கேள்வி.அதையே தர்மேந்திரா கோபத்தோட கேக்கற மாதிரியா ஒரு டயலாக் எழுதிடலாம். “

    “அந்த ஸிசுவேஷன்லே கிளாமர் இருக்காதே …”

    “அதுக்காக இன்னொரு ஸாங்.மெகபூபா…மெகபூபா…”

    ” ஜெயஸ்ரீ டி யை ஆட வைப்போம். “,என்றார் ஜாவேத்.

    “ஹெலன் ஆடுனா செமையா இருக்கும்.”,சலீம் கருத்து.

    ( இவன் ஒருத்தன் ..ஹெலனுக்கு பேசாம மூதாட்டி ரோல் கொடுத்து இருக்கலாம். கல்யாணம் பண்ணி வெச்சாதான், இவங்க காதலுக்கு ஒரு THE END போட முடியும். )

    ” போலீஸ் அதிகாரி, ஏன் கப்பர் ஸிங்கை பழி வாங்குறார் என்பதற்கு வலுவான காரணத்தை சொல்லணும். “

    “ONCE UPON A TIME IN THE WEST (1968) லேந்து ஸீன் எடுப்போம். “

    ” கொள்ளையர்கள் சரக்கு ரயிலை சுற்றி வளைத்து தாக்குற போது, ஹீரோ தர்மேந்திரா எண்ட்ரி. “

    ” இந்த ஸீன் NORTH WEST FRONTIER (1959)லே இருக்கே! “

    “SO WHAT? நாம எந்த ஸீனைத்தான் யோசிச்சு எழுதினோம். “

    மௌஸி பச்சனிடம் சொல்வார்.

    “ஆயிரம் குறை இருந்தாலும், உன் நண்பனை பற்றிய பெருமைதான் உனக்கு. “

    அமிதாப் பெண் கேட்டு வரும், அந்த ஸீனும் HALF TICKET & DULHAN EK RAAT KI யில் வந்ததுதான்!

    “ஷோலே “யை பற்றியும் இதையே சொல்ல முடியும்.

    “எத்தனை படங்களை காப்பி அடித்து, எடுக்கப்பட்டிருந்தாலும், ஷோலே தன்னிகரற்ற சினிமா. வெளிநாட்டு படங்களை, இது போல இந்திய ஸெண்டிமென்டிற்கு ஏற்ப /நம்பும் படி யாருமே படம் எடுக்கவில்லை. “

    “அங்காரே ” தலைப்பு ஸிப்பிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால “ஷோலே “என்றானது.

    நெருப்பு பொறிகள் என்று அர்த்தமுள்ள ஷோலே, ஹிந்தியில் ஏற்கனவே ..அந்த டைட்டிலில் ஒரு படம் வந்த போது, “SHOLE “என ஸ்பெல்லிங் இருந்தது.

    ஷோலேவில் FROM THE BEGINNING, தர்மேந்திரா – ஹேமா மாலினி உறுதியாக இருந்தனர்.

    1973இல் ‘ஷோலே’ படப்பிடிப்பின் இறுதிநாள்

    வயசான போலீஸ் அதிகாரி ரோலில் பிரான்.தர்மேந்திரா நண்பனாக ஷத்ருகன் ஸின்ஹா. வில்லன் ரோலில் டேனி.

    போலீஸ் கேரக்டர் ரொம்ப POWERFUL ஆக மாறியதால், பிரானை விட்டு திலிப் குமாரை அணுகினர்.வயதான கேரக்டர் / ஹீரோயின் இல்லை/ பாட்டு கிடையாது என்பதால், திலிப் ஸாப் நடிக்க மறுத்து விட்டார்.

    சஞ்சீவ் குமாரிடம் கதையை கூற, உடனே ஓகே என்றார்.

    டேனி, ஃபெரோஸ் கான் படமான, “தர்மாத்மா “வில் பிஸியாக நடித்து கொண்டு இருந்தார்.

    “மூணு ஹீரோ நடிக்கும் படத்தில், உனக்கு நடிக்க வாய்ப்பு இருக்காது.”,என்று டேனியிடம், ஃபெரோஸ் சொன்னார்.

    அதை டேனியும் நம்பி விட்டார்.கப்பர் ஸிங் இவ்ளோ ஃபேமஸ் ஆவார்னு யாருமே எதிர்பார்க்கவில்லை.

    அம்ஜத் கானுக்கு, “ஷோலே ” முதல் படமல்ல. போலவே, அவர் பழம்பெரும் நடிகர் ஜெயந்தின் மகன்.

    “LOVE AND GOD ” என்றொரு படம்.”மொகலே ஆஸம் “ற்கு பிறகு கே.ஆஸிஃப் டைரக்ட் பண்ண ஆரம்பித்த படம்.

    கே.ஆஸிஃப் இறந்ததால், படப்பிடிப்பு அப்பப்போ நடந்து, 1986 ல் ரிலீஸாகி படுதோல்வி அடைந்த படத்தில் ஹீரோ சஞ்சீவ் குமார். அதில் ஒரு ரோலை அம்ஜத் கான் செய்தார். டைரக்டர் ஸிப்பியிடம், அம்ஜதை சிபாரிசு செய்தது சஞ்சீவ் தான்!

    அப்போ மேடை நாடகங்களில் நடித்து கொண்டிருந்த கான், கப்பர் ஸிங்காக நடிப்பது, சலீம் – ஜாவேதிற்கு பிடிக்கவில்லை.

    டப்பிங் சமயத்திலும், அம்ஜத் குரல் கப்பர் கேரக்டருக்கு பொருந்தவில்லை, எனவும் வேறொருவரை வைத்து டப் பண்ணலாம் என SJ கூற, டைரக்டர் மறுத்து விட்டார்.

    “ஷோலே “ரிலீஸான பின்பு, ரொம்ப பாப்புலர் ஆனது அம்ஜத் கான் தான்!

    அவருடைய குரலும், பயங்கர சிரிப்பும், வசன உச்சரிப்பும், “இவர்தான் வில்லன் ..”என்று மிரட்டினார்.

    அப்புறமா SJ எழுதிய எந்த படத்திலும், அம்ஜத் நடிக்கவேயில்லை.

    அமிதாபின் நெருங்கிய நண்பராக மாறிய அம்ஜத், (SJ எழுதாத) அமிதாப் படங்களில் நடித்தார்.

    “ஷோலே ” சஞ்சீவ் – அம்ஜத் இருவரின் கதைதான்! அவர்களுக்கு மட்டுமே படத்தில் ஸ்ட்ராங் & பவர்ஃபுல் ரோல்.

    கப்பர் ஸிங் ரோலில், தானே நடிப்பதாக அடம் பிடித்தார் சஞ்சீவ்.

    போலீஸ் ரோலில், இரு கைகளை இழந்தவராக, தான் நடிப்பதாக தர்மேந்திரா பிடிவாதம் பிடித்தார்.

    நீங்க நடிக்கும் வீரு கேரக்டருக்கு ஜோடி ஹேமா. நிறைய லவ் ஸீன்ஸ்…நீங்க அந்த ரோலை மறுத்துட்டா, சஞ்சீவ் தான் அதை செய்வார், என்று டைரக்டர் சொல்ல, தரம்ஜி உஷாராகி விட்டார்.

    ஏன்னா, அப்போ ஹேமா மீது சஞ்சீவும் ஆசைப்பட்டார்.

    “எப்படியாவது ஷத்ருவை கழற்றி, அந்த ரோலை அமிதாபுக்கு வாங்கி கொடுத்துடணும் …”னு விரும்பிய SJ, பச்சனிடம் ஒரு ஐடியா சொல்ல …

    அவர் தர்மேந்திராவை போய் சந்திக்கிறார்.

    “ஏன் கண் கலங்கி இருக்கு.தைரியமா இரு.நல்ல வாய்ப்பு வரும்…”

    ” நீங்க மனசு வெச்சா…”

    மற்றவர்களின் கண்ணீர் / கஷ்டத்தை பார்க்க முடியாதவர், தர்மேந்திரா.

    அமிதாபிற்கு ஷோலே கிடைத்தது.

    ராஜேஷ் கன்னாவையே தூக்கி வீசிய சலீம் – ஜாவேதுக்கு தர்மேந்திரா என்னா பெரிய பருப்பா?

    அவருடைய நன்றியை மறந்து, SJ & பச்சன் நடந்தனர்.

    அப்புறமா அவர்களே பிரிந்தனர்.

    அன்பு, கருணை, உதவி, நன்றி இவற்றின் நடமாடும் உதாரணமான தர்மேந்திராவை ,தோற்கடிக்க முடியவில்லை.

    “ஷோலே ” பார்த்த பெரும்பாலோர், அம்ஜத் கான் – அமிதாப் -சஞ்சீவின் நடிப்பை பாராட்டினர்.

    “ஷோலே ” வின் ஆன்மா தர்மேந்திரா தான்.அவருடைய காட்சிகள் /நடிப்புதான், படத்தை போரடிக்காத மாதிரி கொண்டு போனது.

    அவர் இல்லை என்றால், “ஷோலே ” ஆர்ட் படம் போலத்தான் இருந்து இருக்கும்.

    காசுக்காக கப்பரை பிடிக்க வந்தாலும், நிராயுதபாணியாக நிற்கும் போது ,உதவாத சஞ்சீவிடம் கோபப்படுவதும், அவருடைய கதையை கேட்டு, கப்பரை பிடிப்பதில் மும்முரம் காட்டுவதும், லொடலொடவென பேசிக் கொண்டே இருக்குற ஹேமாவின் அழகில் மயங்கி காதலிப்பதும், ஹேமாவை ஏமாத்த சிவன் சிலை பின்னாலிருந்து கடவுளை போல பேசுவதும், திருமணத்திற்கு சம்மதிக்காத மௌஸியை பயமுறுத்த, குடிபோதையில் தண்ணீர் டாங்கின் மேலே ஏறி தற்கொலை செய்வதாக சொல்வதும், தன் பிள்ளையை பலி கொடுத்த இமாம் ஸாஹெபை, பாங்கொலி கேட்டு, மசூதிக்கு அழைத்து செல்வதென்ன …நண்பனின் சடலத்தை பார்த்து, சுண்டி போடுற ஒற்றை நாணயம் டூப் என தெரிந்து அழுவதும், நண்பனின் சாவுக்கு பழிவாங்குவதற்கு, “EK EK KU CHUN CHUN KAR MAARUNGA ..GABBAR SINGH…MAI AA RAHA HOON… “,என்று கத்துவதென்ன …கப்பரை நீ கொல்லக்கூடாதென சஞ்சீவ் சொல்ல, இயலாமையினால் மௌனமாக நகர்வது என்னா …

    ஆஹா…தர்மேந்திரா வாழ்ந்து இருக்கிறார்.

    இந்த படத்திற்கு OPENING கிடைத்ததே தரம்ஜியினால் தானே!

    அதே1975 ல் BLOCKBUSTER NO :2 வில், “PRATIGGYA “வின் ஹீரோவும் தரம்ஜி தான்!

    “SEVEN SAMURAI “(1954) ஜப்பானிய படம் தான், இந்த கொள்ளையர் VS காப்பாளர் CONCEPT ஐ TRENDSETTER ஆக்கியது.

    அதை இயக்கியவர், அகிரா குரோஸாவா.அதை தழுவி, 1960 ல் ஹாலிவுட்டில் ,”THE MAGNIFICENT SEVEN “வந்தது.

    ராம்கட் எனும் கிராமத்தில், “ஷோலே ” வின் கதை நிகழ்கிறது.

    அந்த கிராமத்தில், (பண்ணையார் போல) ட்ஹாகூர் பல்தேவ் ஸிங் ( சஞ்சீவ் குமார்) , தன்னோட விதவை மருமகள் ராத்ஹா (ஜெயா பாதுரி) உடன் வசிக்கிறார்.

    தான் போலீஸாக இருந்த போது ,கைது செய்த இரண்டு திருடர்களை தேடுகிறார்.

    வீரு ( தர்மேந்திரா) & ஜெய் (அமிதாப் பச்சன்) .

    ராம்கட் கிராமத்தை அச்சுறுத்தும் கொள்ளைக்கூட்டத் தலைவன் கப்பர் ஸிங்கை, (அம்ஜத் கான் ),உயிருடன் பிடிக்குற துணிச்சல், வீரம் அந்த இரண்டு திருடர்களுக்கு மட்டுமே உண்டு என நம்புகிறார், சஞ்சீவ்.

    அவர்களும் ராம்கடுக்கு வருகிறார்கள்.

    தீய நோக்கத்துடன் வந்தவர்கள், குதிரை வண்டி ஓட்டும் ஹேமா மாலினி மீது தர்மேந்திராவும் ,விதவை ஜெயா பாதுரி மீது பச்சனும் காதல் கொள்கிறார்கள்.

    கப்பரை ஏன் உயிருடன் பிடிக்க துடிக்கிறார், சஞ்சீவ்?

    அவனை அந்த இரண்டு திருடர்களால் பிடிக்க முடிந்ததா?

    அவர்களின் காதல் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

    : ராம்கட் ஒரு பெரிய கிராமம் தான்…அங்கே ரயில்வே ஸ்டேஷனும் உள்ளது.ஆனால், கொள்ளையர்கள் உள்ள ஊரில் போலீஸ் ஸ்டேஷன் இல்லை என்பது விந்தை.

    ஏழை மக்களுக்கு டவுன் பஸ் விடாத அரசாங்கம், பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டாத அரசாங்கம் வில்லனா?

    கப்பர் ஸிங் வில்லனா?

    அவ்ளோ பெரிய ஊருக்கு, ஒரே ஒரு குதிரை வண்டி தானா? ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, ராம்காடுக்கு வர ஏழைகளால் குதிரை வண்டிக்கு வாடகை தர முடியுமா?

    ராம்கட் கிராமவாசிகள், பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிகள் போல இருக்காங்க. இவங்க கிட்டே, கப்பர் ஸிங் என்னா கொள்ளை அடித்து விட முடியும்?

    ராம்கடில் இருக்குற ஒரே பணக்காரர், சஞ்சீவ் குமார் தான்.அவர் வீட்டில கொள்ளை அடிக்காமல், எதுக்காக ஏழைகளின் சொற்ப வருமானத்தை ( அதுவும் பணமோ / நகையோ கிடையாது.அரிசி, கோதுமை தான்..இதுக்கு பேசாம ரேஷன் கடையில திருடலாமே..)அவங்க திருட வரணும்?

    ராம்கடில் இருக்கிற ஒரே முஸ்லிம், கண் பார்வையில்லாத இமாம் ஸாஹெப், ஏ.கே.ஹங்கல்.அவருக்காகவே ஒரு மசூதி கூட உண்டு.

    கோயிலும் இருக்கிறது.ஆனால், சர்ச் கிடையாது.கிறிஸ்துவம் நுழையாத, கிராமம் இந்தியாவில் உண்டா?

    விதவை ஜெயா பாதுரியை, மறுமணம் செய்து கொள்ள பச்சன் ரெடி. அவரை கிளைமாக்ஸ்லே கொன்று, பழைய சடங்கு, சம்பிரதாயத்திற்கு ஆதரவாக, விதவை மறுமணம் செய்யாத மாதிரி வெச்சது, அறமற்ற செயல்.

    ஸச்சினுக்கு (இமாம் ஸாப் மகன்), கிராமத்தில் வேலை கிடைக்கலையா? அப்படியே வெளியூரில் வேலை கிடைத்து, போனாலும் ரயிலில் போய் இருக்கலாமே? தனியாக குதிரையில் போக வேண்டிய அவசரம் என்னா? போருக்கா போகிறார்? அந்த குதிரை யாருடையது? அவரோட சொந்த குதிரை என்றால், அவ்வளவு வசதியானவர் ஏன் வேலைக்கு போகணும்?

    சட்டத்தை மதிக்க வேண்டிய, முன்னாள் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் குமார், தன்னோட ஷூக்களில் ஆணி குத்திக் கொண்டு, அந்த கால்களால், கப்பர் ஸிங்கின் கைகளை வெட்டுவது, உச்சபட்ச வன்முறை.மனிதாபிமானமற்ற செயல்.

    கப்பர் ஸிங்கைத் தான், தர்மேந்திரா அடிச்சு துவைத்தாரே …அத்தோட விட்டிருக்கலாம்.

    : இந்த கொள்ளையர்களுக்கு குடும்பம் கிடையாதா? பின் ஏன் / யாருக்காக இவர்கள் கொள்ளை அடிக்க வேண்டும்?

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே, வட இந்தியாவில் குறிப்பாக உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளில், உயர் சாதியினரால், பணக்காரர்களால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதங்களை ஏந்துகிறார்கள்.

    பணக்கார /உயர்சாதி ஆட்சியினருக்கு, அவர்களால் ஆபத்து என்பதால், பயங்கர குற்றவாளிகள் எனும் தோற்றத்தை போலீஸ் /அரசாங்கம் உருவாக்க, ஊரை விட்டு ஒதுங்கி, காடுகளில் / மலைகளில் வாழ்ந்தார்கள்.

    தங்கள் /குடும்ப /சமூக தேவைக்காக, பணம் படைத்த /ஜமீன்தார் குடும்பங்களை கொள்ளை அடித்தார்கள்.

    பெண்களை கண்ணியத்துடன் நடத்தியவர்கள்.

    ஆங்கிலேயருக்கு எதிராக,இந்திய சுதந்திரத்திற்காக போராடிய கொள்ளையர்களும் உண்டு.

    சுதந்திர இந்தியாவில், பழைய நிலை மாறும் என்று, மற்றவர்களை போல கொள்ளையர்களும் நம்பினார்கள்.

    மாறவில்லை. ஆட்சியை தவிர வேறெதுவும் மாறவேயில்லை.

    சாதி, வர்க்கத்தின் பெயரால் கீழே இருந்த சமூகம், இன்னும் அதிகமான பாதிப்புகளை சந்தித்தது.

    வேறு வழியில்லாததால், கொள்ளையர்கள் தொடர்ந்து உருவாயினர்!

    அவர்களை பற்றிய, ஓரளவு நேர்மையான காட்சிகள் /காரணங்களை, “MOTHER INDIA “(1957),”GANGA JAMUNA “(1961),”JIS DESH MAI GANGA BEHTI HAI “(1961),”MUJHE JEENE DO “(1963) படங்களில் காட்டினர்.

    முழுக்க உண்மையை, கொள்ளையர்கள் வில்லன்கள் கிடையாது என்பதை, வெளிப்படுத்திய படங்கள் …”GHULAMI “(1985),”BANDIT QUEEN “(1994),”PAAN SINGH TOMAR “(2012).

    : ACHARYA VINOBA BHAAVE…மஹாத்மா காந்தி உடன் நெருக்கமாக இருந்த சீடர்.பல கொள்ளையர்கள் தங்கள் பாதையை விட்டு, சரணடைய காரணமாக இருந்தவர்.

    கமர்ஷியல் சினிமாவிற்கு, கதையை விட எப்போவும் வில்லன்களின் தேவை இருக்கும்.

    இப்போ முஸ்லிம் தீவிரவாதிகள் எனும் கற்பிதம் போல, அப்போ கொள்ளையர்களை வில்லனாக சித்தரித்தார்கள்.

    அந்த வகை சினிமாவில், “ஷோலே “யை போல, பெரிய வெற்றியை எந்த படமும் பெறவில்லை.

    “ஷோலே ” வின் ஒளிப்பதிவாளர், DWARKA DIVECHA.

    வேகமாக ஓடுற குதிரைகள், ரயில், ராம்கட் என்பது நிஜ கிராமம் என நம்ப வைத்தது, (பெங்களூர் அருகே ராமநகரா ஊரின் அருகே போடப்பட்ட ஸெட். ) கொள்ளையர் கூடாரம், அங்கே இரவில் நடக்குற ஹெலன் டேன்ஸ், ஆரம்ப ரயில் சண்டைக்காட்சி, கிளைமாக்ஸ் ஃபைட்…எல்லாமே புதுவித அனுபவத்தை பார்வையாளனுக்கு கொடுத்து, பிரமிப்பை ஏற்படுத்தினார், திவேசா.

    வெளிநாட்டு படங்களை பார்க்காத, என்னை போன்ற பாமரனுக்கு “ஷோலே “மிகப்பெரிய காட்சி அனுபவம்.

    எத்தனை முறை பார்த்தேன் என ஞாபகம் இல்லை.

    “SANJOG “(1943) தான் திவேச்சா ஒளிப்பதிவு செய்த முதல்படம்.

    1960 ல் ரிலீஸான “SINGAPORE ” ல் நடித்தும் உள்ளார், திவேச்சா.

    “ஷோலே “மாதிரி மிகப்பெரிய பாய்ச்சலை, ஒளிப்பதிவில் சாதித்த திவேச்சா, அதன்பின் “UDHAAR KA SINDOOR “(1976),”TRISHNA “(1978) இரண்டு படங்களை மட்டுமே ஒளிப்பதிவு செய்து, 5 ஜனவரி 1978 அன்று இறந்தார், துவார்கா திவேச்சா.

    “ஷோலே “வின் இன்னொரு UNSUNG HERO, அதன் எடிட்டர், M.S.SHINDE.

    3 LAKH FEET படமாக்கப்பட்ட, “ஷோலே ” வை 21,000 அடியாக சுருக்கியவர் என்றால்…ஷிண்டேவின் திறமையை புரிந்து கொள்ளலாம்.

    ஸென்ஸார் போர்ட் வன்முறை காட்சிகளுக்கு, ஆட்சேபனை தெரிவிக்க, அந்த 21,000 அடியும் …18,000 அடியாக FINAL PRINT ஆகி, தியேட்டர்ல வெளியானது.

    சஞ்சீவ் குமாரின் FLASHBACK தான் ரொம்ப நேரம் ஓடுற போர்ஷன். அந்த பகுதி மட்டுமே படத்தில் போரடிக்கும்.அங்கே எடிட்டர் கத்திரி போட்டு இருக்கலாம்.

    “ஷோலே “வை படத்தொகுப்பு செய்தது சவாலான காரியம்.அதில் சாதித்து காட்டினார், ஷிண்டே.

    100 படங்களுக்கு மேல் எடிட்டிங் செய்த ஷிண்டே …தன்னோட 82 வது வயதில், 28 செப்டம்பர் 2012 ல் இறந்தார்!

    SIPPY FILMS பேனரில், “ஷோலே “வை தயாரித்தார் G.P.SIPPY.

    டைரக்டர் ரமேஷ் ஸிப்பியின் தந்தை. மகன் மீதான நம்பிக்கையில், இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து, உலக சினிமாவின் வரலாற்றில் “ஷோலே “வை இடம்பெற வைத்தார்.

    1951 ல் “SAZAA ” எனும் தன் முதல் படத்தை தயாரித்த, ஜி.பி.ஸிப்பி 20 படங்களை தயாரித்தார்.6 படங்களை டைரக்ட் பண்ணி உள்ளார்!

    “HAMESHA “(1997) ஸிப்பி ஸாப் தயாரித்த கடைசிப் படம். தன்னோட 93 வது வயதில், 2007 ல் இறந்தார் ,ஜி.பி.ஸிப்பி.

    ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன், ஷாஹ் ருக் கான்…மூன்று சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியவர்களில், ஸிப்பி ஸாபும் ஒருவர்!

    டைரக்டர் ரமேஷ் ஸிப்பிக்கு, “ஷோலே ” மூன்றாவது படம்தான்!

    அவ்வளவு சின்ன வயதில், உலகப் புகழை பெற்ற படத்தை இயக்கியவர்.

    “ஷோலே “…அவருடைய சாதனையே, அவருக்கு சோதனையாக மாறி விட்டது.

    மீண்டும் அப்படி ஒரு படமல்ல…அதற்கு நெருக்கமாக கூட, அவரால் ஒரு படத்தை எடுக்க முடியவில்லை.

    “ஷோலே ” டீமில் இருந்த தர்மேந்திராவை கழற்றி, ஏன் அவர் “SHAAN “(1980) எனும் படுதோல்வி படத்தை அடுத்ததாக எடுத்தாரோ?

    “தங்கப்பதக்கம் ” ரீமேக் 1982 ல் “SHAKTI “யை இயக்கினார். அதுவும் ஓடலே.

    சிவாஜி ரோலில் திலிப் குமார். ஸ்ரீகாந்த் ரோலில் அமிதாப். இருவரும் இணைந்து நடித்த ஒரே படம்.

    காப்பியடித்தே கதை எழுதும், சலீம் – ஜாவேத் அந்த ஒரு ரீமேக் படத்திற்கு மட்டுமே, திரைக்கதை – வசனத்தை எழுதினர்!

    1985 ல் ரிஷி கபூர் – கமல் ஹாஸனுடன், “பாபி “க்கு பிறகு டிம்பிள் கபாடியா ரீ எண்ட்ரி கொடுத்த, “SAAGAR “ஐ எடுத்தார், ரமேஷ்ஜி. ம்ஹூம்.

    அதன்பின் தூர்தர்ஷனில், 1986 ல் “BUNIYAAD ” TV SERIAL எடுத்து, அங்கே ரொம்ப ஃபேமஸ் ஆனார்!

    இதுவரைக்கும் 12 படங்களை மட்டுமே டைரக்ட் பண்ணிய ரமேஷ் ஸிப்பி, கடைசியாக 2020 ல் “ஷிம்லா மிர்ச்சி ” எனும் படுதோல்வி படத்தை எடுத்தார்.

    “ஷோலே ” கூட்டு முயற்சி, பலரின் உழைப்பு என்றாலும், சலீம் – ஜாவேத் இரட்டையர்களின் கனவு, சாதனை என்பதை மறுக்க முடியாது.

    ஹிந்தி சினிமாவில் கதாசிரியர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தியவர்கள். நல்ல சம்பளத்தை கதாசிரியர்கள் வாங்க காரணமானவர்கள், SJ தான்!

    இருவரும் 20 படங்களுக்கு மட்டுமே சேர்ந்து எழுதினர்!

    பிரிந்த பின், தனித்தனியாக இன்றும் எழுதுகின்றனர்.

    ஒரு நல்ல மசாலா படத்தின் ஸ்கிரிப்ட், எப்படி எழுத வேண்டுமென, சலீம் – ஜாவேத் “ஷோலே ” வில் காட்டி விட்டார்கள்!

    படத்தின் முதல் பாதியில், அஸ்ராணி, கேஷ்டோ முகர்ஜி, ஜகதீப் காமெடியை வைத்து, “ஷோலே “யை போரடிக்காத மாதிரி, எழுதி …இரண்டாம் பாதியில் தர்மேந்திராவின் காமெடியை வைத்து, டெம்போவை மெயிண்டைன் பண்ணினார்கள்.

    சஞ்சீவ் குமாரின் FLASHBACK முடிந்தவுடன், கதைக்கான காரணம், கதாபாத்திரங்களின் நோக்கமாக மாறும்போது இடைவேளை.

    2 ND HALF ல் நடக்குற கதையில், சண்டைகளில் மாறி மாறி ஹீரோக்களும், வில்லனும் ஜெயிப்பது ..தர்மேந்திரா – ஹேமா லவ் போர்ஷன், காமெடி ..

    இடைவேளைக்கு முன்பே,சஞ்சீவ் குடும்பத்தை வைத்து, நிறைய அழ வைத்தவர்கள்.

    இடைவேளைக்கு பிறகு, இமாம் ஸாஹெப் மகன் ஸச்சின், கப்பரால் கொல்லப்படுற காட்சியை தொடர்ந்து வரும் 10 நிமிடங்கள் ..உருக்கமான காட்சி…உணர்ச்சிகரமான வசனங்கள்.

    “ஷோலே ” வின் ஹைலைட் ஸீன் ..

    குதிரையில் ஊருக்கு திரும்ப வரும், ஸச்சின் சடலத்துடன் கப்பரின் கடிதம் இருக்கும்.

    சடலத்தின் அருகே கிராமவாசிகள், தர்மேந்திரா, அமிதாப் கூடுவர்.கண்பார்வை தெரியாத, ஸச்சின் அப்பா ஏ.கே.ஹங்கலும் வருவார்!

    “ITNA SANNAATA KYUN HAI BHAI? “

    ( ஏன் இந்த மௌனம்? )

    கிராமாவாசி ஒருவர் கப்பரின் லெடரை படிப்பார்.இனி அங்கே தர்மேந்திரா & பச்சன் இருக்க கூடாது என்று எச்சரிக்கும் செய்தி.

    கிராமவாசிகளும் பேச ஆரம்பிக்க…அந்த தருணத்தில் எண்ட்ரி ஆகும் சஞ்சீவ், “நான் சண்டையை தொடர்வேன் ..”என்பார்.

    “JO JHUKTE NAHI ..WOH TOOT JAATE HAIN…”

    “THAAKUR NAA JHUK SAKTA HAI..NAA TOOT SAKTA HAI…THAAKUR SIRF MAR SAKTA HAI..AUR JAB TAK JIYUNGA SAR UTHAAKE JIYUNGA…”

    “ட்ஹாகுர் வளையவும் மாட்டான்.உடையவும் மாட்டான்.சாக மட்டுமே செய்வான். உயிருடன் இருக்குற வரைக்கும், தலை நிமிர்ந்து வாழ்வேன்.”

    “KAB TAK JIYENGE TUM..KAB TAK JIYENGE HUM..JAB TAK YE DONO YAHAAN RAHEN..”

    “எப்போ வரை நீங்க வாழுவீங்க.என்னைக்கு வரை நாங்க உயிரோட இருப்போம். இந்த இருவரும் இங்கே இருக்கும் வரையா? “

    தர்மேந்திரா – அமிதாபை சுமையாக பேச, தன் பிள்ளையை பறி கொடுத்த இமாம் ஸாப் சொல்வார்.

    “JAANTE HO DUNYA MAI SABSE BADA BOJH KAUN SA HAI..BAAP KE KAANDHON MAI BETE KA JANAAZA.AAJ ALLAH SE SHIKAYAT KARUNGA …MUJHE AUR AULAAD KYUN NAHI DIYE IS GAAUN PE SHAHEED HONE KE LIYE..BETA MAINE KHOYA HAI..PHIR BHI MAI YEHI CHAAHUNGA, YE DONO YEHEEN RAHEN ..”

    “உலகத்துல ரொம்பவே பளுவான சுமை எது தெரியுமா? ஒரு தந்தையின் தோள்களில், மகனோட சடலம். இன்னைக்கு அல்லாஹ்விடம் என் குறையை சொல்வேன். இந்த ஊருக்காக உயிரை தியாகம் பண்ண, ஏன் எனக்கு இன்னும் பிள்ளைகளை தரவில்லை என்று..

    மகனை இழந்தது நான்.இருந்தாலும், இந்த இருவரும் இங்கேயே இருக்கட்டும். “

    : அம்ஜத் கானுக்கு, கிடைத்த ONE LINERS அற்புதம்.

    “KITNE AADMI THAY? “

    ( அவங்க எத்தனை பேரு? “

    ” SAAMBHA…KITNA INAAM RAKHA HAI SARKAR HUM PE? “

    ( ஸாம்ப்ஹா…என்னை பிடித்து கொடுத்தா,அரசாங்கம் எவ்ளோ பரிசு தரும்? )

    “JAB BACHA ROTA HAI..MAA KEHTI HAI…SOJA BETA…WARNA GABBAR AA JAYEGA…”

    ” தூங்காம அழற பிள்ளைகளிடம், கப்பர் வந்துருவான்னு அவங்கம்மா பயமுறுத்துவாங்க.”

    “YE HAAT HUMKU DEDE THAAKUR…”

    ” உன் கைகளை எனக்கு கொடு ட்ஹாகூர். “

    “JAB TAK TERE PAIR CHALENGE…TERE YAAR KI SAANS CHALEGI…JAB TERE PAIR RUKEGI…TO YE BANDOOQ CHALEGI…”

    ” உன் கால்கள் ஆடும் வரைக்கும் ..உன் காதலனோட மூச்சும் ஓடும். உன் கால்கள் நின்றால்…இந்த துப்பாக்கி வெடிக்கும். “

    ஒவ்வொரு கேரக்டரையும், சின்னதாக இருந்தாலும் சரி, சாகும்வரை மறக்காத படி உருவாக்கினார்கள், சலீம் – ஜாவேத்!

    ஹிட்லர் மீசையுடன், ANGREZ KE ZAMAANE KE JAILOR அஸ்ராணி, சிறையில் இருக்குற போலீஸ் உளவாளி, ஹரிராம் நாயி கேஷ்டோ முகர்ஜி, விறகு கடை நடத்துற ஸூர்மா ப்ஹோபாலி ஜெகதீப், படத்தில் மூன்றே வசனம் பேசுற (கப்பர் ஸிங்கின் கையாள்) ஸாம்ப்ஹா மக்மோஹன், “மெஹ்பூபா ” பாடலுக்கு ஆடும் ஹெலன் கூட பாடும் ஜலால் ஆகா, சஞ்சீவ் குமாரின் வேலையாள் ராமு காக்கா ஸத்யன் கபூ, ஹேமா மாலினியை வளர்க்கும் மௌஸி லீலா மிஸ்ரா, இமாம் ஸாஹெப் ஏ.கே.ஹங்கல், அவரோட மகன் ஸச்சின், விதவிதமான சிறைக் கைதிகள், கப்பரின் ஆள் காலியாவாக விஜூ கோட்ஹே …போலீஸ் அதிகாரிகளாக ஓம் ஷிவ் பூரி, ஜெய்ராஜ், விகாஸ் ஆனந்த், இஃப்திகார், ( ஜெயா பாதுரி அப்பா ).

    FLASHBACK ல் வரும் சஞ்சீவ் குடும்பத்தினராக, கீதா ஸித்ஹார்த், ஷரத் குமார், அரவிந்த் ஜோஷி மற்றும் அந்த சிறுவன் ….

    ஆஹா! அற்புதமான CASTING. ஒவ்வொரு நடிகர் /நடிகையும் இயல்பாக செய்தனர்.

    ஒரு ACTION MASALA MOVIE யை AESTHETIC ஆக கலை நேர்த்தியுடன் எடுக்க முடியும் என்பதற்கு உதாரணம் “ஷோலே “…

    வேதனை என்னவென்றால் ….சினிமாக்காரர்கள் அந்த ஜீவனை தவற விட்டு, வெறும் 70MM, MULTI STARRER, பிரம்மாண்டமான படங்களை எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர்.

    “ஷோலே ” வின் இரண்டு ஹீரோயின்கள் ஹேமா மாலினி, ஜெயா பாதுரி. இருவருக்கும் நல்ல ரோல்ஸ். அழகாகவும் இருந்தார்கள். நல்லாவும் நடிச்சாங்க.

    எப்பவும் பேசிக் கொண்டே இருக்குற பஸந்தியாக ஹேமா மாலினி, வாயிருந்தும் ஊமையாக ஜெயா அசத்தினர்.

    அமிதாப் மனைவி ஆகி விட்ட ஜெயா, “ஷோலே “ஷூட்டிங்கில் கர்ப்பிணி.

    தரம்ஜி – ஹேமா லவ் “ஷோலே “ஷூட்டிங்கில் உச்சமாகி, 1980 ல் திருமணமானது.

    “ஷோலே “வில் அமிதாப் நடிப்பு, குறிப்பாக கிளைமாக்ஸ் சாகும் ஸீனில், அவரோட ஸ்டைல், அவரை வெகுவாக பாப்புலர் ஆக்கியது.1975 ல் “ஷோலே ” அமிதாப் ஸர்ப்ரைஸ்.

    அதே ஆண்டு, “DEEWAAR ” வர ( ANOTHER SJ WRITING ) மேலும் பச்சன் மேனியா பரவியது.

    “ஷோலே ” உருவாக்கியதில், முக்கியமான பங்கு வகித்த ,வெளியில் தெரியாத மூவர்.

    கலை இயக்குனர், RAM YEDEKAR.ஹிந்தி சினிமாவின் பிரபல ஆர்ட் டைரக்டர். “ஷோலே ” வில், கர்நாடகாவில் இருந்த மலை சார்ந்த காட்டுப் பகுதியில், தத்ரூபமாக ராம்கட் கிராமத்தை உருவாக்கியவர்.

    சஞ்சீவ் வீடு, தண்ணீர் டேங்க், ஜெயில், கொள்ளையர்கள் இருப்பிடம் என அனைத்தும் சூப்பர்.

    ACTION CO ORDINATOR ஆக ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் GERRY CRAMPTAN, அவருக்கு உதவியாக முஹம்மத் அலி, ஹேமா மாலினி டூப்பாக ரேஷ்மா பட்ஹான் எனும் பெண் பணிபுரிந்தனர்.

    அதுவரை இந்திய சினிமாவில், பார்த்திராத பயங்கரமான சண்டைக் காட்சிகள்.

    REVOLUTION IN CINEMA SOUND என்று “ஷோலே ” வின் ஸவுண்ட் / ஒலிப்பதிவு ரொம்பவே பாப்புலர்.

    அமிதாப் சுண்டி போடுற நாணயம் கீழே விழும் சத்தம், ஆயுதங்களின் /ரயில் /குதிரைகளின் சத்தம் தெளிவாக, அழகாக ரசித்து கேட்க முடிந்தது.

    அமிதாப் வாசிக்கும் மவுத் ஆர்கன், சண்டைக் காட்சிகளின் டிஷ்யூம்….டிஷ்யூம்…அனைத்தையும் பிரமாதமாக ஒலிப்பதிவு செய்த மாஸ்டர், மங்கேஷ் தேசாய்!

    SALUTE TO ALL THE UNSUNG HEROES …BEHIND THE MASTERPIECE “SHOLAY. “

    ஆனந்த் பக்ஷி பாடல்களை எழுதினார்!

    ஆர்.டி.பர்மனின் இசையில் பாடல்கள் பிரமாதம் என்றாலும், பின்னணி இசை குறிப்பாக டைட்டில் மியூஸிக் சூப்பர்.

    ஹோலி பாட்டென்றால்….அது “HOLI KE DIN ..” .தான்!

    நட்பை கொண்டாடும் பாட்டென்றால்…அது “YE DOSTI ..”தான்!

    ஐட்டம் ஸாங் என்றால்…”MEHBOOBA…”தான்!

    இப்படி காலத்திற்கும், அழியாத கானங்களை தந்தவர், ஆர்.டி.பர்மன்!

    1) “YE DOSTI HUM NAHI CHODENGE..CHODENGE DUM MAGAR …TERA SAAT NAA TODENGE…”/

    கிஷோர் குமார் & மன்னா டே.

    2) ” HOLI KE DIN…DIL KHIL JAATE HAIN ..RANGON SE RANG MIL JAATE HAIN ..”/

    கிஷோர் குமார் & லதா மங்கேஷ்கர்.

    3) “MEHBOOBA …MEHBOOBA..”/

    ஆர்.டி. பர்மன்.

    4) “JAB TAK HAI JAAN..JAANE JAHAAN…MAI NAACHUNGI…”/

    லதா மங்கேஷ்கர்.

    4) “KOI HASEENA JAB ROOT JAATI HAI …TO…AUR BHI HASEEN HO JAATI HAI…”/

    கிஷோர் குமார்.

    இந்தியாவில் தயாரான, இரண்டாவது 70MM படம், “ஷோலே “.

    ராஜ் கபூர் நடித்த, “AROUND THE WORLD “(1967) தான், முதலில் வந்த 70MM படம்.

    15 ஆகஸ்ட் 1975, “ஷோலே ” ரிலீஸான சமயத்தில், பம்பாயில் 2, யூபியில் ஒன்று, டில்லியில் ஒன்றென, நான்கே நான்கு தியேட்டர்ல தான், 70MM PRINT வெளியானது.

    “ஷோலே “ரிலீஸாகி 21 ஆண்டுகள் கழித்து, முதல்முறையாக தொலைக்காட்சி DDயில் ஒளிபரப்பான போது, மொத்த இந்தியாவும் ஒன்றாக சேர்ந்து பார்த்து, அதற்கான தங்கள் வற்றாத அன்பை பரிசாக தந்தனர்!

    ஹிந்தியில் மட்டுமல்ல, இந்திய மொழிகளில் எத்தனையோ சிறந்த படங்கள் வந்திருந்தாலும், “ஷோலே ” வின் வசீகரமே தனிதான்!

    தொடர்புக்கு: writer.afzal1@gmail.com

    கட்டுரையாளர் அப்சல்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘கூலி’ மாஸ் எண்டர்டெயினராக மிகச்சிறப்பாக வந்திருக்கிறது: உதயநிதி ஸ்டாலின்

    August 13, 2025
    சினிமா

    16 வருடத்துக்குப் பிறகு மலையாளத்தில் மீண்டும் சாந்தனு!

    August 13, 2025
    சினிமா

    ஆந்திர அரசு வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை: நீத்தி அகர்வால் விளக்கம்

    August 13, 2025
    சினிமா

    இந்த ஆண்டு பல பாடங்களை கற்றுக் கொண்டேன்: ஹன்சிகா

    August 13, 2025
    சினிமா

    ‘கூலி’ பாடலை பாராட்டிய ஹாலிவுட் நடிகை!

    August 13, 2025
    சினிமா

    அபிநய் சிகிச்சைக்கு தனுஷ் உதவி!

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மனிதன் ஒரு சோடியம் இல்லாத உணவுக்காக AI க்கு திரும்புகிறான், சித்தப்பிரமை, மாயத்தோற்றம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் வியாதியுடன் முடிகிறான்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘வாக்கு திருட்டு’ விழிப்புணர்வு பிரச்சாரம்: பிஹாரில் ஆக.17 முதல் 15 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைபயணம்
    • ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து: தமிழக காங், விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் புறக்கணிப்பு
    • ஆப்டிகல் மாயை: 858 களில் மறைந்திருக்கும் ஸ்னீக்கி 828 ஐ வெளிக்கொணர உங்களுக்கு கூர்மையானது இருக்கிறதா ?? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 79-வது சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1 லட்சம் போலீஸார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.