சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், ‘சன்னிதானம் பிஓ’. இதில் யோகிபாபு, கன்னட நடிகர் ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் சித்தாரா, பிரமோத் ஷெட்டி, மூணறு ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகொடி, சாத்விக் வினோத் சாகர் உட்பட பலர் நடித்துள்ளனர். அமுதா சாரதி இயக்கியுள்ளார். சர்வதா சினி கேரேஜ், ரேஜ், ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ், வி.விவேகானந்தன், ஷபீர் பதான் தயாரிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு கேரளாவில் சபரிமலை ஐயப்பன் சன்னிதானம், பம்பை, எருமேலி போன்ற இடங்களிலும், சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இயக்குநர் சேரன், நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ளனர்.