டார்வின்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 178 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டிம் டேவிட் 83(52 பந்துகள்), கேமரூன் கிரீன் 35(13 பந்துகள்) குவித்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கவெனா மாபாகா 4 விக்கெட்களைச் சாய்த்தார்.
பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. அணியில் அதிகபட்சமாக ரியான்ரிக்கெல்டன் 71ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட், பென் டுவார்ஷுயிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக டிம் டேவிட் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டி20 போட்டி ஆகஸ்ட் 12-ம் தேதி(நாளை) நடைபெறவுள்ளது.