மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,200 கனஅடியாக சரிந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 13,483 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9,200 கனஅடியாக குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 14,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணை நீர்மட்டம் நேற்று 118.54 அடியாகவும், நீர் இருப்பு 91.16 டிஎம்சியாகவும் இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 8,000 கனஅடியாக குறைந்தது.