புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.
இந்தியாவுக்கு விதித்தது போலவே தென்அமெரிக்க நாடான பிரேசிலுக்கும் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அரசு அமல் செய்திருக்கிறது.
இந்த சூழலில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.