புதுடெல்லி: மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) மற்றும் பொது- தனியார் கூட்டாண்மை மூலம் விமான நிலையங்களை நவீனமயமாக்க கடந்த 2019-20 முதல் 2024-25 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ரூ.96,000 கோடிக்கும் அதிகமான மூலதன செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி, கோலாப்பூர், ஜபல்பூர், குவாலியர், ராஜ்கோட், லே, ஹூப்பள்ளி, இம்பால், ஜோத்பூர், உதய்பூர், ராஜமுந்திரி, பெலகாவி, தூத்துக்குடி உள்ளிட்ட பல விமான நிலையங்களில் விரிவாக்கத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு முரளிதர் தெரிவித்துள்ளார்.