ரிடிப் ஷெட்டி, இயக்கி, நடித்த ‘காந்தாரா’ கன்னடத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்தப் பாகம், ‘காந்தாரா’ படத்தின் முன் கதையைச் சொல்லும் விதமாக, ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.
ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நாயகனாக நடிக்கிறார். இதில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அர்விந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார். இந்தப் படம் அக்.2-ல் வெளியாகிறது.
இந்நிலையில் வரமஹாலக்ஷ்மி தினத்தை முன்னிட்டு, இந்தப் படத்தில் ‘கனகவதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ருக்மணி வசந்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.