சென்னை: சப்-ஜூனியர் ஆடவர் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று பஞ்சாப் – ஜார்க்கண்ட் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
பஞ்சாப் அணி சார்பில் மன்தீப் சிங் இரு கோல்களும் (45 மற்றும் 53-வது நிமிடங்கள்) அக்ஷத் சலாரியா (29-வது நிமிடம்), வரீந்தர் சிங் (30-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
உத்தரபிரதேச அணி 5-3 என்ற கோல் கணக்கில் மத்தியபிரதேச அணியை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.