சிட்னி: ஆஸ்திரேலியா ‘ஏ‘ கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 நாட்கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 16 முதல் 20-ம் தேதி வரையும், 2-வது டெஸ்ட் போட்டி 23 முதல் 26-ம் தேதி வரையும் லக்னோவில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரிலும் மோதுகின்றன. ஒருநாள் போட்டி செப்டம்பர் 30, அக்டோபர் 3, 5-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா ஏ அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டெஸ்ட் போட்டிக்கான அணியில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய தொடக்க பேட்ஸ்மேன்களான சேம் கான்ஸ்டாஸ், நேதன் மெக்ஸ்வீனி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் அணி: சேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, ஜாக் எட்வர்ட்ஸ், ஆரோன் ஹார்டி, கேம்பல் கெல்லாவே, சாம் கான்ஸ்டாஸ், நேதன் மெக்ஸ்வீனி, லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, பெர்கஸ் ஓ’நீல், ஆலிவர் பீக், ஜோஷ் பிலிப், கோரி ரோச்சிசியோலி, லியாம் ஸ்காட்.
ஒருநாள் போட்டி அணி: கூப்பர் கானொலி, ஹாரி டிக்சன், ஜாக் எட்வர்ட்ஸ், சாம் எலியட், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, மெக்கன்சி ஹார்வி, டாட் மர்பி, தன்வீர் சங்கா, லியாம் ஸ்காட், லாச்சி ஷா, டாம் ஸ்ட்ரேக்கர், வில் சதர்லேண்ட், கலும் விட்லர்.