புலவாயோ: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
புலவாயோ நகரில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியானது 48.5 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பிரண்டன் டெய்லர் 44, தஃபட்ஸ்வா சிகா 33, நிக் வெல்ச் 11, சீயன் வில்லியம்ஸ் 11 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.
நியூஸிலாந்து அணி சார்பில் மேட் ஹென்றி 5, ஜகரி ஃபவுல்க்ஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 39 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. டேவன் கான்வே 79, ஜேக்கப் டஃபி 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வில்யங் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நியூஸிலாந்து இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்கிறது.