புதுடெல்லி: மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் சிஇஓ அனிஷ் ஷா கூறியுள்ளதாவது: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தை (இஎஸ்ஓபி) அறிமுகப்படுத்த உள்ளோம். ஆலைத் தொழிலாளர்கள் உட்பட ஒவ்வொரு நபரும் பயனடையும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த முயற்சி மஹிந்திராவின் மூன்று முக்கிய துணை நிறுவனங்களான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (ஆட்டோ மற்றும் பண்ணை துறை), மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் மற்றும் மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி ஆகியவற்றை உள்ளடக்கியது.
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பணியாளர்களுக்கு நன்றியுணர்வின் அடையாளமாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 23,000 தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.400-500 கோடி மதிப்பில் பங்குகள் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.