அனுஷ்கா, விக்ரம் பிரபு நடித்துள்ள ‘காத்தி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள பாடம் ‘காத்தி’. இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு நாகவல்லி வித்யாசாகர் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது ‘காத்தி’ திரைப்படம். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். கிழக்கு தொடர்ச்சி மலை பின்னணியில் ‘காத்தி’ என்ற பழங்குடியின பெண்ணாக அனுஷ்காவும், அவரது காதலராக விக்ரம் பிரபவும் ட்ரெய்லரில் காட்டப்படுகின்றனர். கார்ப்பரேட் வில்லனிடம் இருந்து தம் மக்களை காக்க இருவரும் ஆக்ஷனில் இறங்குவதாக காட்டப்படுகிறது. ட்ரெய்லரில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் விக்ரம் பிரபு, அனுஷ்கா இருவருமே நம்பிக்கை ஊட்டுகின்றனர். விறுவிறு திரைக்கதையும், சுவாரஸ்யமான காட்சிகளும் இடம்பெற்றால் அனைத்து மொழிகளிலும் வெற்றி உறுதி. இப்படம் வரும் செப்.5 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘காத்தி’ ட்ரெய்லர் வீடியோ: