பாஜக தேசிய செயற்குழு உறுப்பின ரான ஹெச்.ராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத் துக்கு ‘கந்தன் மலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘கிடுகு’ படத்தை இயக் கிய வீரமுருகன் இதை இயக்கியுள் ளார். இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப்படம் பற்றி வீரமுருகன் கூறும் போது, “திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி நடக்கும் கதை இது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. இதில், கந்தன் மலை பகுதியின் ஊர் பெரிய மனிதராக ஹெச்.ராஜா நடிக்கிறார். ‘நாயகன்’ படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் போல, இதில் அவருடைய கதாபாத்திரம் இருக்கும். ஒரு கருத்தைச் சொல்ல பிரபலம் ஒருவர் தேவையாக இருக்கிறார்.
இது போன்ற உண்மையான கருத்தைச் சொல்லும் படத்தில் நடிக்க, பெரிய நடிகர்கள் முன் வர மாட்டார்கள். அதனால், ஹெச்.ராஜாவை அணுகினோம். இன்னும் சொல்லப் போனால் அவர்தான் இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். அரசியல் தலைவர் என்பதைத் தாண்டி நடிகராகவும் இதில் பேசப்படுவார். ஹெச்.ராஜா ஜோடியாக அவர் மனைவியே நடித்திருக்கிறார். மற்றும் சரவணன், தர்மர் என சிலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது” என்றார்.