பெங்களூரு: அதிக சம்பளம் வாங்கும் இந்திய ஐடி துறை சிஇஓ-க்களின் பட்டியலில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சி.விஜயகுமார் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2024-25 நிதியாண்டில் விஜயகுமாருக்கு ரூ.94.6 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இதில், அடிப்படை சம்பளம் ரூ.15.8 கோடி, செயல்திறன் சார்ந்த போனஸ் ரூ.13.9 கோடி உள்ளிட்டவையும் அடக்கம். இவரையடுத்து இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக்கின் சம்பளம் 22 சதவீதம் அதிகரித்து ரூ.80.6 கோடியாகவும், விப்ரோ சிஇஓ நிவாச பலியா ரூ.53.6 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர்.
டிசிஎஸ் சிஇஓ கே. கிருத்திவாசன் ரூ.26.5 கோடியை கடந்த 2023-24-ல் சம்பாத்தியமாக பெற்றுள்ளார். ஹெச்சிஎல் டெக் ஆண்டறிக்கையில் கூறியுள்ளபடி, விஜயகுமாருக்கு கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட சம்பளம் முந்தைய நிதியாண்டை விட 7.9% அதிகரித்துள்ளது.
அதேசமயம், நிர்வாக பணியாளர்களைத் தவிர இதர ஊழியர்களுக்கான சராசரி சம்பள உயர்வு 3.1% ஆக மட்டுமே இருந்தது. சிஇஓ விஜயகுமாரின் சம்பளம் ஊழியர்களின் சராசரி ஊதியத்தை விட 662.5 மடங்கு அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகுமாரை இந்த ஆண்டு செப்.1 முதல் 2030 மார்ச் 31 வரை ஹெச்சிஎல் டெக் சிஇஓ, எம்டி- ஆக மீண்டும் நியமிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.விஜயகுமார்