‘மாவீரன்’ படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க ஆசை இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் சிவகார்த்திகேயன். அங்கு பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் “உங்களுடைய படங்களில் எதன் 2-ம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?” என்று சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு சிவகார்த்திகேயன், ”ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்கவே பயம். அது ரொம்ப நல்ல கதையாக அமைய வேண்டும். முதல் பாகத்தின் வெற்றியை எந்தவிதத்திலும் பாதிக்கக் கூடாது. ஆனால் ‘மாவீரன்’ படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க ஆசை. அந்தக் கதை ரொம்பவே தனித்தவமானது. ஆகையால் அதை முயற்சிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாவீரன்’. அருண் விஷ்வா தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.