சிவகாசி: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சிவகாசியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில் கோடிக்கணக்கானோர் வாக்களித்து வருகின்றனர். அதேபோல, தமிழகத்தில் வசிக்கும் வடமாநில மக்களுக்கு இங்கு வாக்காளராகும் உரிமை உள்ளது. கீழடியில் அகழாய்வு நடத்தியது மத்திய தொல்லியல் துறை. மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் உறவினரான அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதால், இதில் பிரச்சினையை கிளப்புகின்றனர். இவ்வாறு கூறினார்.