Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, February 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»லயோனல் மெஸ்ஸி டிசம்பரில் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம்: கங்குலி உள்ளிட்ட பிரபலங்களுடன் கால்பந்து விளையாடுகிறார்
    விளையாட்டு

    லயோனல் மெஸ்ஸி டிசம்பரில் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம்: கங்குலி உள்ளிட்ட பிரபலங்களுடன் கால்பந்து விளையாடுகிறார்

    adminBy adminAugust 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    லயோனல் மெஸ்ஸி டிசம்பரில் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம்: கங்குலி உள்ளிட்ட பிரபலங்களுடன் கால்பந்து விளையாடுகிறார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொல்கத்தா: அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும் மெஸ்ஸி சந்திக்கிறார்.

    லயோனல் மெஸ்ஸி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தை முன்பதிவு செய்வது உட்பட அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் ஆனால் மெஸ்ஸியிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப் படுத்தலுக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்னும் காத்திருப்பததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

    மெஸ்​ஸியின் சுற்​றுப்​பயணம் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. அவரது அதி​காரப்​பூர்வ அறி​விப்​புக்​காக நாங்​கள் காத்​திருக்​கிறோம், ஒரு​வேளை இதுதொடர்​பான அறி​விப்பு மெஸ்​ஸியின் சமூக வலைதள பக்​கத்​தில் விரை​வில் வெளி​யாகக்​கூடும்” என கொல்​கத்தா வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

    பயணத்​திட்​டத்​தின்​படி, லயோனல் மெஸ்ஸி வரும் டிசம்​பர் 12-ம் தேதி இரவு 10 மணி​யள​வில் கொல்​கத்​தாவுக்கு வந்து சேரு​வார். இங்கு அவர், இரண்டு பகல், ஒரு இரவு தங்​கு​வார். 13-ம் தேதி காலை 9 மணி அளவில் பிரபலங்​களு​டன் நடை​பெறும் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் மெஸ்ஸி கலந்து கொள்​கிறார். தொடர்ந்து கொல்​கத்தா விஐபி சாலை​யில் உள்ள லேக் டவுன் பூமி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி திறந்து வைக்​கிறார். உலகிலேயே மெஸ்​ஸிக்கு வைக்​கப்​பட்​டுள்ள மிக உயர​மான சிலை​யாக இது அமை​யும் என போட்டி ஏற்​பாட்​டாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

    இதன் பின்​னர் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானம் செல்​லும் லயோனல் மெஸ்​ஸி, அங்கு பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை நடை​பெறும் இசை நிகழ்ச்சி மற்​றும் கோட் (GOAT) கோப்பை போட்​டி​யில் கலந்து கொள்​கிறார். சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்​கள் நடை​பெறும் இந்த நிகழ்ச்​சி​யில் மெஸ்ஸி ஆயிரக்​கணக்​கான குழந்​தைகளு​டன் உரை​யாட​வும் உள்​ளார்.

    7 பேர் கலந்து கொண்டு விளை​யாடும் இந்த போட்​டி​யில் சவுரவ் கங்​குலி, லியாண்​டர் பயஸ், ஜான் ஆபிர​காம், பாய்ச்​சுங் பூட்​டியா உள்​ளிட்​டோருடன் இணைந்து லயோனல் மெஸ்ஸி விளை​யாட உள்​ளார். இந்த போட்டி வழக்​கம்​போல் இல்​லாமல் மெது​வான தொடு​தல் கொண்​ட​தாக இருக்​கும். இந்த போட்​டியை காண டிக்​கெட் விற்​பனை செய்​யப்பட உள்​ளது. டிக்​கெட்​டின் விலை ரூ.3,500 ஆக இருக்​கக்​கூடும் என கூறப்​படு​கிறது. ஈடன் கார்​டன் மைதானத்​தில் 68 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்​ளது.

    நிகழ்ச்​சி​யின் போது மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜி, மெஸ்​ஸியை கவுரவிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கொல்​கத்தா நிகழ்ச்​சிகளை முடித்​துக் கொண்டு அன்​றைய தினம் மாலை​யில் அதானி அறக்​கட்​டளை​யின் சாந்​தி​கி​ராம் தலை​மையகத்​தில் நடை​பெறும் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​ப​தற்​காக அகம​தா​பாத் செல்​கிறார் மெஸ்​ஸி.

    தொடர்ந்து டிசம்​பர் 14-ம் தேதி மும்​பை​யில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளில் மெஸ்ஸி கலந்து கொள்​கிறார். மாலை 5.30 மணி அளவில் வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் கோட் கோப்பை போட்​டி​யில் விளை​யாடு​கிறார். இதற்​கிடையே தோனி, விராட் கோலி உள்​ளிட்​டோருடன் மெஸ்ஸி கிரிக்​கெட் விளை​யாடக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகின. ஆனால் இதை போட்டி ஏற்​பாட்​டாளர்​கள் மறுத்​துள்​ளனர்.

    மும்பை நிகழ்ச்​சி​யின் போது இந்​திய கால்​பந்து அணி​யுடன் மெஸ்ஸி கலந்​துரை​யாட உள்​ளார். இதைத் தொடர்ந்து 15-ம் தேதி டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடியை சந்​திக்​கிறார் மெஸ்​ஸி. அன்​றைய தினம் பிற்​பகல் 2.15 மணி அளவில் பெரோஷா கோட்லா மைதானத்​தில் நடை​பெறும் கோட் கோப்பை போட்​டி​யிலும் மெஸ்ஸி விளை​யாடு​கிறார். 4 நகரங்​களில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளி​லும் இந்​தி​யா​வின் அடுத்த தலை​முறை இளம் கால்​பந்து வீரர்​களை ஊக்​கப்​படுத்​தும் வகை​யில் அவர்​களு​டன் மெஸ்ஸி கலந்​துரை யாடு​கிறார். இந்த நிகழ்ச்சி 30 முதல் 40 நிமிடங்​கள் நடத்த ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. கடைசி​யாக மெஸ்ஸி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற கண்​காட்சி போட்​டி ஒன்​றில்​ விளை​யாடி இருந்​தார்​. அதன்​ பின்​னர்​ அவர், தற்​போது இந்​தி​யா வருகைதர உள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    528 பந்துகளில் 1,000 ரன்கள்: அபிஷேக் சர்மா அசத்தல் சாதனை!

    December 3, 2025
    விளையாட்டு

    தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது பாகிஸ்தான் அணி!

    December 3, 2025
    விளையாட்டு

    உலக துப்பாக்கி சுடுதலில்: தங்கம் வென்றார் ரவீந்தர்

    December 3, 2025
    விளையாட்டு

    ரஞ்சி கோப்பையில் தமிழகம் 182 ரன்களுக்கு சுருண்டது

    December 3, 2025
    விளையாட்டு

    என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ் இறுதிப் போட்டியில் ராதிகா சீலன்

    December 3, 2025
    விளையாட்டு

    91-வது கிராண்ட் மாஸ்டரானார் சென்னையை சேர்ந்த ராகுல்

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பெக்காம் குடும்ப சண்டை ஆழமடைகிறது: புரூக்ளின் பெக்காம் அப்பா டேவிட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பச்சை குத்தப்பட்டதை மறைக்கிறார், புதிய சர்ச்சையைத் தூண்டுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விண்வெளி பயணங்கள் விரைவில் பாதுகாப்பானதாக இருக்கும்! இந்த பிளாஸ்மா சுரங்கப்பாதை மீண்டும் நுழைவதன் தீவிர வெப்பத்தை சோதிக்கிறது; விண்கலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவின் 5 மாநிலங்களில் ஓடும் ஒரே நதி மற்றும் அதன் தனித்துவம் என்ன? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • Kristin Cabot: Coldplay Kiss Cam ஊழலின் Kristin Cabot நெருக்கடி மாநாட்டில் பேச, டிக்கெட் விலை INR 79,000 | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2026 இல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிறந்த 7 ரியல் எஸ்டேட் ஹாட்ஸ்பாட்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.