சென்னை: சுதந்திர தினத்தையொட்டி மூவர்ணக் கொடி யாத்திரை மற்றும் இதர பணிகளை ஒருங்கிணைக்க தமிழக பாஜகவில் மாநில அளவிலான குழுவை நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, திரங்கா (மூவர்ண கொடி) யாத்திரை, வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஆக.10-ம் தேதி முதல் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூவர்ணக் கொடி யாத்திரை உள் ளிட்ட பணிகளை ஒருங்கி ணைக்கவும், வழி நடத்த வும் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி, இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, மகளிர் அணி தலைவர் கவிதா காந்த், ஓபிசி அணி தலைவர் வீர திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, மகாசுசீந்திரன், தென்காசி மாவட்ட அமைப்பாளர் மகாராஜன் ஆகியோர் செயல்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.