சென்னை: மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
‘மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, எனக்கு துரோகம் செய்துவிட்டார்’ என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருந்தார். இதையொட்டி, மக்களிடம் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக மல்லை சத்யா அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை சிவா னந்தா சாலையில் தனது ஆதரவாளர்களுடன் மல்லை சத்யா நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வைகோ வழியில் ஏராளமான போராட்டத்தில் பங்கேற்று, 32 வழக்குகளைப் பெற்றிருக்கி றேன். துரை வைகோ அரசியலுக்கு வந்தது முதல், வைகோவுக்கு நெருக்கமானவர்கள் ஓரங்கட்டப்படுவதும், அலட்சியப்படுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்தது. துரை சொன்னால் மட்டுமே பேச முடியும் என்ற நிலைக்கு வைகோ தள்ளப்பட்டார். உட்கட்சி ஜனநாய கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு நிற்கிறோம்.
‘வைகோவின் கடைசி காலம்’ என துரை அடிக்கடி சொல்லி, அவரது ஆயுளைக் குறைக்கிறார். அவரைப் பாதுகாக்க வேண்டிய கடமை இனி துரையின் கையில் தான் இருக்கிறது. அவர் நீண்ட நாட் கள் ஆரோக்கியமாக இருந்து திராவிட இயக்க லட்சியங்களை வென்றெடுக்க வேண்டும்.
அதேநேரம், கடந்த 2001-ம் ஆண்டு தொகுதி உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்ட பிறகு, கூட் டணி இல்லை என அறிவித்ததை யும், 2006-ம் ஆண்டு திமுக மாநாட் டில் பங்கேற்பதாகச் சொல்லிவிட்டு போயஸ் தோட்டத்துக்கு வைகோ சென்றதையும் நாடு மறக்கவில்லை. அதுபோன்று செயல்பட்டால் மிச்சமிருக்கும் நம்ப கத்தன்மையும் அடியோடு தகர்க்கப்படும்.