‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ படத்தின் திட்டங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக ‘லியோ’ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ படங்களில் இடம்பெறுகிறது. தற்போது ‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ குறித்து பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அதில் “’மாஸ்டர் 2’ படத்தின் ஐடியாவை விஜய் சாரிடம் கூறினேன். அப்படம் ரொம்பவே ஜாலியாக இருக்கும். ஏனென்றால் ஜே.டி கதாபாத்திரம் பார்வையாளர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதே போல் ’லியோ 2’ ஐடியாவும் விஜய் சாரிடம் கூறியிருக்கிறேன். ஆனால் அவருடைய பார்வை இப்போது மக்களுக்கு சேவை செய்வதாகும்.
சினிமா என்பது பொழுதுபோக்கு. இது முக்கியமா, மக்கள் சேவை முக்கியமா என்றால் மக்கள் சேவை தான் முக்கியம். ஆகையால் அவரிடம் பெரிதாக அதைப் பற்றி விவாதிக்கவில்லை. ஆனால் அவரை மீண்டும் இயக்க ரொம்பவே ஆசை. அந்த முடிவை விஜய் சார் தான் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.