திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகேயுள்ள படைவீடு (படவேடு) என்ற கிராமத்தில் ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. கமண்டல நதியின் கரையோரம் அமைந்துள்ள இந்த கோயிலில் ஆடி மாதம் 7 வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஆடி பெருவிழா மிகவும் விசேஷமாகும். சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமான தலமாக இருக்கிறது. இங்கு அம்மன் சிரசு சுயம்புவாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசி வழங் குகிறார்.
அம்மன் சந்நிதிகளில் குங்குமம் பிரசாதமாக தரப்படுவது வழக்கம். ஆனால், படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயில் சுற்றுச்சுவர்களின் மீது சிங்கத்திற்கு பதிலாக பசுவின் சிலைகளே உள்ளது.
அம்மன் சந்நிதிகளில் பலிபீடம் முன்பாக யாழி அல்லது சிங்கம் இருக்கும். இங்கு மட்டும் எருது உள்ளது தனிச்சிறப்பு. சக்திக்குள் அனைத்தும் அடங்கும் என்பதை உணர்த்தும் வகையில் கோயில் கருவறையில் அம்மன் சுயம்பு சிரசுவாகவும், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அரூபங்களுடன் அருள்பாலிக் கின்றனர்.
ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் அமைந்துள்ளது. ரேணுகாதேவியின் தலையை வெட்டிய பரசுராமனின் புராணத்தை பின்னணியாக கொண்டது இத்தலம். இக்கோயிலில் தரப்படும் தீர்த்தத்தை குடித்து அம்மனை வணங்கி பக்தர்கள் அருள் பெற்று வருகின்றனர்.