பொதுவாக மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறை களின்கீழ் உள்ள உயர் பணிகள், ‘ஒயிட் காலர் ஜாப்ஸ்’ என்று குறிப்பிடப்படுவதைக் கவனித் திருக்கலாம். அதேபோல் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணிகள் ‘புளூ காலர் ஜாப்ஸ்’ என்று குறிப்பிடப்படுகின்றன. பெரும்பாலானோர் அறிந்தது இந்த இரண்டு வகை ‘காலர் ஜாப்ஸ்’தான். என்றாலும் வேலையின் தன்மை, ஊதியம் ஆகியவற்றைப் பொறுத்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவற்றில் சில:
புளூ காலர்: கட்டுமானத் துறை, வேளாண்மை, விளையாட் டுத் துறையைப் போன்று திறந்தவெளியில் அதிக உடல் உழைப்பைச் செலுத் தக்கூடிய வேலைகள் ‘புளூ காலர்’ பட்டியலின் கீழ் குறிப்பிடப்படுகின்றன. தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்களில் மேற் கொள்ளப்படும் இயந்திரப் பணிகளும் இப்பட்டியலில் சேரும்.
யெல்லோ காலர்: ஒயிட்-புளூ காலர் பணிகள், பணியாளர்களுக்கு இடையே ஒரு பாலமாக இயங்குபவர் யெல்லோ காலர் பணியாளர்கள். உதாரண மாக, இதழியல் துறை, வரைகலை வடிவமைப்பு, அனி மேஷன், விளம்பரம், சமூக வலைத்தள மேலாண்மை போன்ற துறைகளின்கீழ் உள்ள பணிகள் யெல்லோ காலர் வகையைச் சேரும்.
கிரீன் காலர்: சூழலியலாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, ஆய்வாளர், மறுசுழற்சி செயற் பாட்டாளரைப் போன்று சுற்றுச்சூழல், அதன் பாதுகாப்பு தொடர்பான வேலைகளில் ஈடுபடு பவர் கிரீன் காலர் பணி யாளர்கள்.
ஒயிட் காலர்: அலுவலகப் பணிகள் என இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிடலாம். மேலாண்மை, ஆட்சி முறை, எழுத்துத் தொடர்பான பணிகள் இப்பட்டியலில் இடம் பெறும்.
கிரே காலர்: ஒயிட் காலர் பணிகளைப் போன்ற திறனும், புளூ காலர் பணிகளைப் போன்ற உழைப்பும் சேர்ந்த கலவைதான் கிரே காலர். அதாவது செவிலியர்கள், ஆய்வகப் பரிசோதனையாளர்கள், மின்துறை பணியாளர்கள், சமையல் நிபுணர்கள் ஆகியோர் இப்பிரிவில் இடம்பெறுவர்.
பிங்க் காலர்: ஆசிரியர், செவிலியர், அழகுக்கலை நிபுணர், வரவேற்பாளர் போன்ற பணிகளில் பெண்களே அதிகம் காணப்படுகின்றனர் என்பதன் அடிப்படையில் இவை பிங்க் காலர் ஜாப்ஸ் எனப்படுகின்றன. ஆனால், பெரும்பாலும் மற்ற துறைகளி லும் பெண்களின் பங்களிப்பு இருக்கும் சூழலில் இன்னும் ஊதியத்தில் பாகுபாடு நிலவு கிறது. பிங்க் என்றாலே அது பெண்களுக்கானது என்று பாலின அடிப்படையில் மட்டும் கட்டமைக்கப்பட்டிருக்கும் ‘பிங்க் காலர்’ பிரிவின் மீது விமர்சனங்களும் உண்டு!
ரெயின்போ காலர்: ரெயின்போ காலர் பணிகள் எனக் குறிப்பிட்ட பட்டியல் எதுவும் இல்லை. ஆனால், பால் புதுமையரை உள்ளடக்கிய எந்தவொரு வேலையானாலும் அது ‘ரெயின்போ காலர்’ எனக் குறிப்பிடப்படுகிறது. மருத்து வம், பொறியியல், கல்வி, கலை என எந்தத் துறையிலும் அவர்கள் பணியாற்றலாம். ஆனால், பால் புதுமையரின் பிரதிநிதித்துவத்தை அடையாளம் காண இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஓபன் காலர்: காலப்போக்கில் ‘அப்டேட்’ ஆகிக் கொண்டே இருக்கும் இந்த காலர் பட்டியலில், அண்மையில் சேர்க்கப்பட்ட ஒரு பிரிவுதான் ‘ஓபன் காலர்’. அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்யும் ஃபிரீலான்சர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை பணியாளர்கள், வெர்ச்சுவ லாகப் பணியாற்றுபவர் ஆகியோர் இப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இணையப் புரட்சிக்குப் பிறகு பிறந்த புதிய காலர் இது!