சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் (2025-26) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்கள் பங்கேற்கலாம்.
அல்லது ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மாணவர்கள் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களின் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.