ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கரில் புகழ்பெற்ற வைத்தியநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புனித ஷ்ராவண மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித கங்கை நீரை எடுத்துவந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இது கன்வர் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் இக்கோயிலுக்கு சுமார் 35 பக்தர்கள் சென்ற ஒரு பேருந்தும் எதிரில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் தேவ்கர் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.