சிவகாசி: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்னைக் கைது செய்து சிறையில் தனிமை அறையில் அடைத்து கொடுமைப்படுத்தினர். செத்தாலும் அதிமுகவுக்கு எதிராகச் செயல்பட மாட்டேன் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். சிவகாசியில் ஆக.7-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் பேரணி’ குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த வுடன் என்னை வேட்டையாடியது. மோசடி வழக்கில் என்னைக் கைது செய்து சிறையில் வைத்தபோது அதிமுகவுக்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்துக் கேட்டு மிரட்டினர்.
நாங்கள் சொல்வதைக் கேட்டால் உங்களுக்குத் தேவையானதைச் செய்வோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், என்னை தனிமைச் சிறையில் அடைத்து மிரட்டிப் பணிய வைக்க நினைத் தனர். ஆனால், நான் எதற்கும் கட்டுப்படவில்லை.
செத்தாலும் சாவேனே தவிர, அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன். கொடுப்பதுதான் எனது பழக்கம், நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என கண்ணீர் மல்க பேசினார்.
நேற்று முன்தினம் இரவு சிவகாசியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் விழாவில் பிரதமர் கலந்து கொண்டது தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் தமிழ் மன் னர்கள் மீது அவர் கொண்டுள்ள பற்றைக் காட்டுகிறது.
பிரதமர் நிகழ்ச்சியில் தொகுதி எம்பி என்ற முறையில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டது போற்றத்தக்கது. பிரதமர் மோடியை பொதுச் செயலாளர் பழனிசாமி சந்தித்தது அதிமுக- பாஜக கூட்டணி பலமாக இருப்பதற்கான சான்று, என்றார்.