சாங்சோவ்: சீன ஓபன் பாட்மிண்டன் தொடரின் அரை இறுதியில் இந்தியாவின் சாட்விக், ஷிராக் ஜோடி அரை தோல்வி அடைந்தது.
சீனாவின் சாங்சோவ் நகரில் சீனா ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள மலேசியாவின் ஆரோன் ஷியா, சோ வூ யிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் சாட்விக், ஷிராக் ஜோடி 13-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.