2017ஆம் ஆண்டு வெளியான ‘வல்ல தேசம்’ படத்தை இயக்கியவர் என்.டி. நந்தா. இவர் தற்போது முழுக்க முழுக்க ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி கவனம் ஈர்த்திருக்கிறார். இப்பாடலுக்கு இவரே இசையமைக்கவும் செய்திருக்கிறார். லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் என்.டி. நந்தா கல்வி பயின்றுள்ளார்.
தற்போது முழுக்க முழுக்க எந்த ஒரு பங்கேற்பாளரும் இல்லாமல், தானே இசையமைத்து, பாடல் எழுதி ஏஐ மூலம் விஷுவல்களை உருவாக்கி, இந்த புதிய வீடியோ ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். ‘என் உயிரின் ஓசை நீயே’ என்று தொடங்கும் இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் காதலின் ஏக்கத்தை, வலியை பேசுகிறது. இப்பாடல் ‘யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்’ எனும் பெயரில் சில மாற்றங்களுடன் ஆங்கில வடிவிலும் உருவாகியுள்ளது. தமிழ்ப்பாடலை, சீர்காழி சிற்பி எழுதியுள்ளார். தற்போது, நந்தா ‘120 ஹவர்ஸ்’ எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாக உள்ளது.