புதுடெல்லி: இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வரும் செப்டம்பர் 4 முதல் 14 வரை உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 20 பேர் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீராங்கனைகளான லோவ்லினா போர்கோஹெய்ன், நிகத் ஜரீன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவில்லை.
ஆடவர் அணி: ஜதுமணி சிங் மாண்டெங்பாம் (50 கிலோ), பவன் பர்ட்வால் (55 கிலோ), சச்சின் சிவாச் ஜூனியர் (60 கிலோ), அபினாஷ் ஜம்வால் (65 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), லக் ஷ்யா சாஹர் (80 கிலோ), ஜுக்னூ அஹ்லாவத் (85 கிலோ), ஹர்ஷ் சவுத்ரி (90 கிலோ), நரேந்தர் பெர்வால் (90+ கிலோ).
மகளிர் அணி: மீனாட்சி ஹூடா (48 கிலோ), நிகத் ஜரீன் (51 கிலோ), சாக் ஷி (54 கிலோ), ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ), சஞ்சு காத்ரி (60 கிலோ), நீரஜ் போகட் (60 கிலோ), சனமச்சா சானு (70 கிலோ), லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), பூஜா ராணி (80 கிலோ), நூபுர் ஷியோரன் (80+ கிலோ).
இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஆகஸ்ட் மாதம் ஆஸி. பயணம்: ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி வரும் ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7 வரை பிஹாரில் உள்ள ராஜ்கிர் பகுதியில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி வரும் ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நட்புரீதியிலான இந்த 4 ஆட்டங்களும் பெர்த் நகரில் ஆகஸ்ட் 15, 16, 19 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் 2 ஆட்டங்களில் இருந்து ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.