Last Updated : 23 Jul, 2025 06:39 AM
Published : 23 Jul 2025 06:39 AM
Last Updated : 23 Jul 2025 06:39 AM

புதுடெல்லி: நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027, ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைய இருந்தது. இந்நிலையில் தன்கர் நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பி வைத்தார்.
‘‘உடல்நலனுக்கு முன்னுரிமை அளித்தும் மருத்துவ ஆலோசனைக்கு கட்டுப்பட்டும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 67(ஏ) பிரிவின் கீழ் குடியரசு துணைத் தலைவர் பதவியை நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்’’ என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தன்கரின் ராஜினமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவரே நாடாளுமன்ற மாநிலங்களவையின் தலைவர் ஆவார். இந்நிலையில் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் தன்கர் விலகியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொங்கியிருக்கும் வேளையில் தன்கர் பதவி விலகியுள்ளார்.
FOLLOW US
தவறவிடாதீர்!