சென்னை: 4-வது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை ஐசிஎஃப் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. இதன் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் பாலமுருகன் (ஐடிடிசி) 8-11, 14-12, 11-6, 8-11, 11-3, 10-12, 11-8 என்ற செட் கணக்கில் கார்த்திக்கேயனையும் (எஸ்கேஅகாடமி), மகளிர் பிரிவில் யாஷினி (எஸ்கே அகாடமி) 11-9, 12-14, 11-9, 11-6, 11-2 என்ற செட் கணக்கில் அம்ருதாபுஷ்பக்கையும் (ஆர்பிஐ)தோற்கடித்து பட்டம் வென்றனர். யு-17 சிறுவர் பிரிவில் நிகில்மேனன் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
யு-19 சிறுவர் பிரிவில் பி.பி.அபிநந்த் (சென்னை அச்சீவர்ஸ்), யு-15 பிரிவில் ஆகாஷ் ராஜவேலு (சிடிடிஎஃப்), யு-13 பிரிவில் எம்.அஷ்வஜித் (எஸ்கே அகாடமி), யு-11 பிரிவில் சித்தார்த் ஆதித்யன் (எஸ்எஸ்ஹெச்ஐ) ஆகியோர் வெற்றி பெற்றனர். யு-19 சிறுமியர் பிரிவில் அனன்யா (சென்னை அச்சீவர்ஸ்), யு-17 பிரிவில் அனன்யா (சென்னை அச்சீவர்ஸ்), யு-15 பிரிவில் பவித்ரா (நெய்வேலி), யு-13 பிரிவில் அம்பதி பூஜா (நெய்வேலி), யு-11 பிரிவில் பிரதிகா (எஸ்எஸ்ஏ, ஈரோடு) ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.4.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.